சிதம்பரம் நகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி பகுதியில் வரி வசூலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சிதம்பரம் நகராட்சியில் வரி வசூல் செய்வது மிகப் பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக, நிதி சிக்கலில் நகராட்சி தவித்து வருகிறது.தற்போதைய கவுன்சில் பொறுப்பேற்ற பின், நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின்பேரில் வரி வசூலில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. பல்வேறு அதிரடி
 சிதம்பரம் நகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரம்

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி பகுதியில் வரி வசூலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிதம்பரம் நகராட்சியில் வரி வசூல் செய்வது மிகப் பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக, நிதி சிக்கலில் நகராட்சி தவித்து வருகிறது.

தற்போதைய கவுன்சில் பொறுப்பேற்ற பின், நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின்பேரில் வரி வசூலில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலமாக, நகராட்சி ஊழியர்கள் வரியை வசூல் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நகராட்சி வாகனங்கள் மூலமாக நகர மக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

'சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரி பாக்கிகளை நகராட்சிக்கு செலுத்தாவிட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வரி செலுத்துவோர் நலன் கருதி நகராட்சி அலுவலகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வரி செலுத்தும் மையம் செயல்படும், வரி செலுத்துபவர்கள் எந்த நேரத்திலும் வரி செலுத்தலாம்' என அறிவிக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X