விதிமீறிய தனியார் கட்டடம் நுங்கம்பாக்கத்தில் இடிப்பு

Added : நவ 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம், நான்கு மாடி கட்டடத்தில் செயல்படுகிறது.இந்த கட்டடத்தின் உரிமையாளர், தரை தளத்தில் காலியாக விட வேண்டிய இடங்களில், விதிகளை மீறி கூடுதல் அறைகளைக் கட்டியுள்ளார்.இந்த கூடுதல் பகுதிகள் மருந்து விற்பனையகம், பரிசோதனைக் கூடம், ஜெனரேட்டர் வைப்பது, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
 விதிமீறிய தனியார் கட்டடம் நுங்கம்பாக்கத்தில் இடிப்பு

சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம், நான்கு மாடி கட்டடத்தில் செயல்படுகிறது.

இந்த கட்டடத்தின் உரிமையாளர், தரை தளத்தில் காலியாக விட வேண்டிய இடங்களில், விதிகளை மீறி கூடுதல் அறைகளைக் கட்டியுள்ளார்.இந்த கூடுதல் பகுதிகள் மருந்து விற்பனையகம், பரிசோதனைக் கூடம், ஜெனரேட்டர் வைப்பது, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.ஆக்கிரமிப்பு குறித்த புகாரை விசாரித்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், இந்த கட்டடத்தை 'சீல் வைப்பதற்கான நோட்டீசை, கடந்த அக்., 14ம் தேதி பிறப்பித்தனர்.

இதையடுத்து, நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள், இந்த வளாகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பாகங்களை உடனடியாக இடித்து, இன்று அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை, இன்று விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நேற்று காலை, 'பொக்லைன்' உள்ளிட்ட வாகனங்களுடன் சென்று, அந்த கட்டட வளாகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பாகங்களை இடிக்கும் பணிகளை துவக்கினர்.

மருந்து விற்பனையகம் உள்ளிட்ட பாகங்களை இடித்த அதிகாரிகள், ஜெனரேட்டர் அறைக்கு சீல் வைத்துள்ளனர். அடுத்த ஓரிரு நாட்களில் இதையும் அகற்ற, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRISHNAN R - chennai,இந்தியா
23-நவ-202209:16:00 IST Report Abuse
KRISHNAN R இது போன்று நடவடிக்கைகள் நல்லது. ஆனால் மக்கள் வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை குடிநீர் ட்ரெயின் ஏஜ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X