பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
திண்டிவனம் : வானுார் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.வானுார் பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக நேற்று காலை திண்டிவனம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனச்சரகர் அஸ்வினி தலைமையில் வனவர் திருமலை மற்றும் வனக்காப்பாளர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வானுார்
 பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்

திண்டிவனம் : வானுார் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

வானுார் பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக நேற்று காலை திண்டிவனம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், வனச்சரகர் அஸ்வினி தலைமையில் வனவர் திருமலை மற்றும் வனக்காப்பாளர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வானுார் அடுத்த துருவை கிராம ஏரிக்கரை பகுதியில், 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.

அவர்களை சோதனை செய்ததில், துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்பட்ட பறவைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், புதுச்சேரி, கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த தோகைப்பாடி மகன் முருகன், 27; மொய்தீன் மகன் பிரபு, 38; என தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த நத்தை கொத்தி, கொக்கு உட்பட 22 பறவைகள் மற்றும் நாட்டு துப்பாக்கி, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X