டிவிஷன் ஹாக்கி லீக் தெறிக்க விட்டது 'யூத் விங்'

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை :சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.இப்போட்டியில், தமிழக தபால் அணி, ரிசர்வ் வங்கி, மின் வாரியம் என, கிளப் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் நடந்த ஆட்டங்களில் தமிழக தபால் அணி மற்றும் லிங்கராஜ் மெமோரியல் ஹாக்கி
 டிவிஷன் ஹாக்கி லீக் தெறிக்க விட்டது 'யூத் விங்'

சென்னை :சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.

இப்போட்டியில், தமிழக தபால் அணி, ரிசர்வ் வங்கி, மின் வாரியம் என, கிளப் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் நடந்த ஆட்டங்களில் தமிழக தபால் அணி மற்றும் லிங்கராஜ் மெமோரியல் ஹாக்கி கிளப் அணிகள் மோதின. அதில், முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து, 23 மற்றும் 24வது நிமிடங்களில், தபால் அணியின் வீரர்கள் மணிகண்டன், ஆனந்த் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

அதைத் தொடர்ந்து, முதல் பாதியின் 29வது நிமிடத்தில், லிங்கராஜ் அணியினர் ஒரு கோல் அடித்தனர். விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில், இரண்டு அணிகளும் கோல்களை அடிக்க முடியாமல் திணறின.

முடிவில், 2 - 1 என்ற கோல் கணக்கில் தபால் அணி வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், ரிசர்வ் வங்கி, 1 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் பிரதர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்று நடந்த முதல் போட்டியில், கோட்டூர் புல் மூன் மற்றும் யூத் விங் அணிகள் மோதின. அதிரடியான ஆட்டத்தின் முடிவில், 6 - 1 என்ற அபார கோல் கணக்கில் யூத் விங் அணி வெற்றி பெற்று அசத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X