பண்ருட்டி : பண்ருட்டியில் உணவகங்கள், இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று சோதனை நடத்தினர்.
மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்ரமணியன், நல்லதம்பி, சுந்தரமூர்த்தி ஆகியோர், பண்ருட்டி பஸ் நிலையம், கடலுார் சாலையில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் இனிப்பகங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனையில், செயற்கை வண்ணம் சேர்த்த புரூட் மிக்ஸ், பலகாரங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
உணவகம், இனிப்பகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தலை உறை, கையுறை, முககவசம் அணிந்து பணிபுரியவும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுரை வழங்கினர்.