வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படுமா? கடலில் கலந்து மழை நீர் வீணாகும் அவலம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
புவனகிரி : புவனகிரி அருகே ஆதிவராகநல்லுாரில், வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும்.புவனகிரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு தன்மையுள்ளதாக மாறி வருவது விவசாயத்துக்கு
வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படுமா? கடலில் கலந்து மழை நீர் வீணாகும் அவலம்

புவனகிரி : புவனகிரி அருகே ஆதிவராகநல்லுாரில், வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும்.

புவனகிரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு தன்மையுள்ளதாக மாறி வருவது விவசாயத்துக்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது. மேலும், குடிநீர் வினியோகத்துக்கும் பிரச்னையாக உள்ளது.

வங்கக் கடலில் ஓதம் எனப்படும் உயர் அலைகள் எழும்போது, பரங்கிப்பேட்டை வெள்ளாற்று வழியாக உப்புத் தண்ணீர் பல கிலோ மீட்டர் துாரத்துக்கு உட்புகுந்து விடுகிறது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு தன்மையுள்ளதாக மாறி உள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புவனகிரி அருகே, ஆதிவராகநல்லுாரில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு, புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. இதுதொடர்பாக, சட்டசபையில் சிதம்பரம், புவனகிரி எம்.எல்.ஏ.,க்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையடுத்து, கடலுாரில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் பழனிசாமி, விரைவில் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார். ஆனால், எந்த பணியும் இதுவரை துவக்கப்படவில்லை.

அதுபோல, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, அப்போதைய வேளாண்துறை இயக்குனர் ககன்தீப் சிங் பேடி, அதிகாரிகளுடன் ஆதிவராகநல்லுார் வெள்ளாற்றை பார்வையிட்டு, தடுப்பணை கட்டுவதற்கான வாய்ப்புகள், மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தார்.

அப்போதைய கலெக்டர் அன்புச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், பொதுப்பணித்துறை திட்ட மதிப்பீட்டு பொறியாளர் கீதா மற்றும் அதிகாரிகள், நிரந்தர தடுப்பணையை ஷட்டருடன் அமைக்க உள்ள வரைப்படத்துடன் விளக்கமளித்தனர். ஆனால், இதுநாள் வரை எந்த வேலையும் நடக்கவில்லை.

இதன் காரணமாக, மழை காலத்தில் ஆற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீர் முழுவதும் யாருக்கும் பயன்படாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. தடுப்பணை இருந்தால் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்க முடியும். நிலத்தடி நீரில் உப்புத்தன்மையும் குறையும்.

எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆதிவராகநல்லுார் அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட துரித நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X