மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி; நாஹர் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : காரைக்குடி மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற விழுப்புரம் நாஹர் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.,) உயரடுக்கு ஆராய்ச்சி பிரிவுகளில் ஒன்றான மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.இ.சி.ஆர்.ஐ.,)
 மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி; நாஹர் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

விழுப்புரம் : காரைக்குடி மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற விழுப்புரம் நாஹர் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.,) உயரடுக்கு ஆராய்ச்சி பிரிவுகளில் ஒன்றான மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.இ.சி.ஆர்.ஐ.,) காரைக்குடியில் உள்ளது.

இந்நிறுவனம் எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை அடுத்த தலைமுறையினருக்கு புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு, அவர்களின் விஞ்ஞானத் திறனை ஊக்குவிக்கவும், எதிர்கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தது.

இதற்காக தமிழகம் முழுதுமிருந்து 72 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தது. இதில், விழுப்புரம் நாஹர் பப்ளிக் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10ம் வகுப்பு மாணவி கோபிகா, மாணவர் குமரவேல் மற்றும் 9ம் வகுப்பு மாணவர் வெங்கடபதி வேலாயுதம் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அதே ஆராய்ச்சி மையத்தில் முதல் கட்டமாக ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காரைக்குடி ஆராய்ச்சி மையத்தில், கடந்த 14 முதல் 19ம் தேதி வரை ஆராய்ச்சிப் பணிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் விஞ்ஞானியால் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்து திரும்பிய மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் மேக்சிமஸ் எச்.ரோஸ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X