ஆண்களுக்கு கருத்தடை விழிப்புணர்வு பிரசாரம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கோவை:ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை வார விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல பணிகள் அலுவலகத்தில், விழிப்புணர்வு ரதத்தை, கலெக்டர் சமீரன் நேற்று துவக்கி வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார்பில், நவ., 21 முதல் டிச., 4 வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா நடத்தப்படுகிறது; இந்தாண்டு விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்,

கோவை:ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை வார விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல பணிகள் அலுவலகத்தில், விழிப்புணர்வு ரதத்தை, கலெக்டர் சமீரன் நேற்று துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார்பில், நவ., 21 முதல் டிச., 4 வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா நடத்தப்படுகிறது; இந்தாண்டு விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்டுகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஆண்களுக்கான வாசக்டமி முகாம், கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்; கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு, ஊக்கத்தொகையாக ரூ.3,100 வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு ரத துவக்க நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, குடும்ப நல துணை இயக்குனர் கவுரி, மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X