கடலுார் : ஆசிய ேஹண்ட் பால் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணிக்கு, கடலுாரைச் சேர்ந்தவர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
தென்கொரியாவில் 19வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி, நாளை 24ம் தேதி துவங்கி, 4ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி பங்கேற்கிறது.
குஜராத் மாநிலம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மைய மேலாளராக பணிபுரியும் கடலுாரைச் சேர்ந்த கார்த்திகேயன், மகளிர் அணிக்கு தலைமை பயிற்றுனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவருக்கு, கடலுார் மாவட்ட ஹேண்ட்பால் கழக தலைவர் சந்திரசேகரன், செயலாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.