போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கடலுாரில் முற்றுகை போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கடலுார் : ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனே வழங்க கோரி, கடலுார் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனே வழங்க வேண்டும்,
 போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கடலுாரில் முற்றுகை போராட்டம்


கடலுார் : ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனே வழங்க கோரி, கடலுார் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனே வழங்க வேண்டும், பேச்சுவார்த்தையின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, கடலூர் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.

அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் முருகன், தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

பொருளாளர் அரும்பாலன், ஓய்வு பெற்றோர் நல சங்க பழனிவேல், ஆறுமுகம், தனபால், கோபாலகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த போராட்டம் காரணமாக, கடலுார் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X