அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
வடலூர் : கிராம வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.கடந்த 2020-21, மற்றும் 2021--22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சமூக தணிக்கை நடக்க உள்ளது. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் குறிஞ்சிப்பாடி, திருச்சோபுரம், வழுதலம்பட்டு, ஆடுர் அகரம், வடக்குத்து ஆகிய 5 மண்டலங்களாக கிராம வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி
 அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்



வடலூர் : கிராம வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

கடந்த 2020-21, மற்றும் 2021--22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சமூக தணிக்கை நடக்க உள்ளது. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் குறிஞ்சிப்பாடி, திருச்சோபுரம், வழுதலம்பட்டு, ஆடுர் அகரம், வடக்குத்து ஆகிய 5 மண்டலங்களாக கிராம வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, மாவட்ட வள அலுவலர் மணி தலைமை தாங்கினார். வட்டார வள பயிற்றுநர்கள் சுதாகர், அந்தோணி, அருள்தாஸ், ஷீலா, பத்மா, கோதைநாயகி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பி.டி.ஓ., சதீஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X