ஆன்லைன் பரிவர்த்தனை: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
கடலுார் : நுாறு சதவீத இ-நாம் ஆன்லைன் பரிவர்த்தனையை அமல்படுத்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் பண்ருட்டி ஒழுங்குமுறைவிற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் கடந்த 2018, 2020ம் ஆண்டில் இருந்து



கடலுார் : நுாறு சதவீத இ-நாம் ஆன்லைன் பரிவர்த்தனையை அமல்படுத்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் பண்ருட்டி ஒழுங்குமுறைவிற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் கடந்த 2018, 2020ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, கடலூர் முதுநகர், குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 மார்க்கெட்டுகளில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2016ம் ஆண்டில், மத்திய அரசால் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) கொண்டு வரப்பட்டது. இதில், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் மூலமாக தேசிய அளவிலான சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

தமிழகத்தில் 2.15 லட்சம் விவசாயிகள், 2,912 வர்த்தகர்கள், 98 விவசாய உற்பத்தி அமைப்பினர் இணைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மட்டும் 2.19 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்துவதும், அதிக அளவிலான சந்தைகளை அணுக வாய்ப்பு ஏற்படுத்தி தருவதும், அதிக அளவிலான வணிகர்களை கொள்முதலில் பங்கேற்க செய்வதும், விரைவாக இ-நாம் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதும், இ-நாம் ஆன்லைன் பரிவர்த்தனையின் சிறப்பம்சங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் 127 மார்க்கெட் கமிட்டிகளில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மொபைல் மூலம் விலை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அதிக போட்டி ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இ-நாம் மூலம் விற்று பயனடையுமாறும், வியாபாரிகள் 100 சதவீதம் இ-நாம் திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X