வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் திருடப்பட்ட மோட்டார் பைக்கை, கும்பகோணத்தில் போலீஸ்காரர் பயன்படுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு வழக்குகள் தொடர்பாகவும், கேட்பவர்கள் யாருமின்றி பல
 வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம்



சிதம்பரம் : சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் திருடப்பட்ட மோட்டார் பைக்கை, கும்பகோணத்தில் போலீஸ்காரர் பயன்படுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு வழக்குகள் தொடர்பாகவும், கேட்பவர்கள் யாருமின்றி பல ஆண்டுகளாக காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை போலீசார் துவக்கி உள்ளனர்.

சிதம்பரம் காவல் நிலையத்தில், பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் தொடர்பான வாகனங்கள், வழக்கு அல்லாத வாகனங்களை போலீசார் கணக்கெடுக்கின்றனர். வாகனங்களின் நம்பரை வைத்து உரிமையாளரின் முகவரியை கண்டறிந்து வருகின்றனர்.

வழக்குகளில் தொடர்பு இல்லாத வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X