அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம் 

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருபுவனை : கலிதீர்த்தால்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு, கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் எச்.டி.எப்.சி., வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் கல்லுாரியின் கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் பாபு தலைமை
 அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம் 



திருபுவனை : கலிதீர்த்தால்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.

தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு, கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் எச்.டி.எப்.சி., வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் கல்லுாரியின் கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் பாபு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாநில இணைப்பு அலுவலர் சதீஷ்குமார், இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமைனயின் ரத்த வங்கி மருத்துவர் ரோஸ்லின் தீபா, எச்.டி.எப்.சி., வங்கி மண்டல மேலாளர் சதீஷ்ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் என்.சி.சி., அலுவலர் கதிர்வேல் வரவேற்றார்.

முகாமில் என்.சி.சி., மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி என்.சி.சி., தலைமையக ஹவில்தார்கள் சந்தோஷ்குமார், கமலநாதன், எச்.டி.எப்.சி., பிராந்திய மேலாளர் வெங்கடேசன், கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X