'விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்'

Added : நவ 22, 2022 | |
Advertisement
'விடா முயற்சி இருந்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்' என, மாணவர்களுக்கு, எஸ்.பி., சக்தி கணேசன் அறிவுரை கூறினார்.அவர் பேசியதாவது:'தினமலர்- பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதை மாணவர்கள் இப்போது உணர மாட்டீர்கள்.விளையாட்டுத் தனமான ஒரு நிகழ்வில் பங்கேற்கிறோம் என்ற உணர்வுதான்
 'விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்'



'விடா முயற்சி இருந்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்' என, மாணவர்களுக்கு, எஸ்.பி., சக்தி கணேசன் அறிவுரை கூறினார்.

அவர் பேசியதாவது:

'தினமலர்- பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதை மாணவர்கள் இப்போது உணர மாட்டீர்கள்.விளையாட்டுத் தனமான ஒரு நிகழ்வில் பங்கேற்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால், பின்னோக்கி பார்க்கும்போதுதான், வாய்ப்புகள் கிடைத்ததை தவற விட்டதாக நினைத்து பார்ப்பீர்கள். இங்கு வினாடி வினா போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் 2 அணிகள் வெற்றி பெற்றன.

பல பள்ளிகளில் போட்டிகள் நடத்தி சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, இதன் மூலமாக மாணவர்கள் எதிர்காலத்தில் 'இஸ்ரோ' விஞ்ஞானிகளாக வருவதற்கான அடித்தளத்தை 'தினமலர்' நாளிதழ் ஏற்படுத்தியுள்ளது.

போட்டிகளில் பரிசு பெறுவது முக்கியமல்ல, எத்தனை பேர் பங்கேற்றார்கள் என்பதுதான் முக்கியம். நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது, அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரிசு பெற வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், இப்போதுதான் உணர்கிறேன்; பரிசு முக்கியமில்லை; பங்கேற்பது தான் முக்கியம் என்று.

நாங்கள் வளர்ந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால், உங்களுக்கு வழிகாட்ட 'தினமலர் ' நாளிதழ் இதுபோன்ற போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாய்ப்புகள் அப்போது இல்லை.

தற்போது வாய்ப்பு கிடைக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தைரியமாக போட்டி போடுங்கள். விடா முயற்சி செய்தால், என்றாவது ஒருநாள் வெற்றி நிச்சயம் கிடைக்கும். விடா முயற்சி செய்ததால் ஐ.பி.எஸ்., தேர்வில் என்னால் சாதிக்க முடிந்தது. எனவே, சாதிக்க விடா முயற்சி அவசியம்.

எதிர்காலத்தில் மாணவ, மாணவிகள் விளையாட்டு, பேச்சுத் திறமை, கட்டுரை எழுதுவது, கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்வது முக்கியம். அப்போதுதான், பல அனுபவங்கள் கிடைக்கும். வெவ்வேறு பள்ளி மாணவர்களுடன் பேசி, பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தயக்கம் இருக்கக் கூடாது. எது தோன்றுகிறதோ அதனை செய்ய வேண்டும். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, எஸ்.பி., சக்திகணேசன் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X