' தோல்வி என்பது இறுதி அல்ல; அது, வெற்றியின் துவக்கம் '

Added : நவ 22, 2022 | |
Advertisement
''தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் மூலமாக சிறந்த கல்விச் சேவையை வழங்கி வருகிறது' என, கலெக்டர் பாலசுப்ரமணியம் பேசினார்.அவர் பேசியதாவது:'தினமலர்' நாளிதழ் நாட்டிற்கும், சமூகத்திற்கும், மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் மிகச் சிறந்த சேவையாற்றிவருவது பாராட்ட வேண்டிய விஷயம். கடந்த 1951ம் ஆண்டு துவங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சிறந்த சேவையாற்றி



''தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் மூலமாக சிறந்த கல்விச் சேவையை வழங்கி வருகிறது' என, கலெக்டர் பாலசுப்ரமணியம் பேசினார்.

அவர் பேசியதாவது:

'தினமலர்' நாளிதழ் நாட்டிற்கும், சமூகத்திற்கும், மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் மிகச் சிறந்த சேவையாற்றிவருவது பாராட்ட வேண்டிய விஷயம். கடந்த 1951ம் ஆண்டு துவங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறது.

குறிப்பாக, மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக 'பட்டம்'இதழை அவர்களுக்கு அளித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு, 'பட்டம்' இதழ் வார இதழாக இருந்தது.மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக தற்போது, வாரத்திற்கு 5 நாள் பல்வேறு செய்திகளைதொகுத்து வெளியிடுகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள 'தினமலர்' நாளிதழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்வி என்பது இறுதி முடிவு இல்லை. வெற்றியின் துவக்கம் ஆகும். மாணவ, மாணவிகள் எதிலும் வெற்றியடையவேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு பள்ளி ஆசிரியர்களும் கடினமான உழைப்பை கொடுக்கின்றனர்.ஆனால், சில மாணவர்கள் மட்டும் தங்களின் முயற்சிகளில் வெற்றி பெறுகின்றனர். சிலர் தங்களின் முயற்சிகளில்வெற்றி பெற முடியவில்லை என வருத்தம் அடைகின்றனர்.

இதற்கு சில அடிப்படை காரணங்கள் உண்டு. இதனை கருத்தில் கொண்டால் மாணவ, மாணவிகள் கண்டிப்பாகவெற்றி பெறலாம். மனிதன் வெற்றியடைய என்ன தேவை என்பதை, 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர்கூறியுள்ளார். அந்த வகையில் பங்கேற்பது என்பது ஒரு முயற்சி. முயற்சியை தொடர்ந்து செய்தால் வாழ்க்கையில்கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை மகிழ்ச்சி என்பது தான். வாழ்க்கையின் குறிக்கோள் மகிழ்ச்சியாக வாழ்வது.

மகிழ்ச்சியாக வாழ குறிக்கோளில் வெற்றியடைய வேண்டும். குறிக்கோளில் வெற்றி பெறாத மனிதனும், மாணவ,மாணவிகளும் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை.

அடிப்படை வாழ்க்கையின் தத்துவமே மகிழ்ச்சியாக இருப்பது. வெற்றியடைய சில அடிப்படை காரணங்களை பின்பற்ற வேண்டும். அதாவது, மாணவ, மாணவிகளுக்கு விடா முயற்சி, தன்னம்பிக்கை தேவை. இதற்கு திட்டமிடல்வேண்டும். வாழ்க்கையில் வெற்றியடையவும், வாழ்க்கையை சிறப்பாக நடத்தவும் அருமையான கருத்துகள்திருக்குறளில் உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திலும் சரி, 'தினமலர்' நாளிதழ் நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது எந்த பெரிய நிறுவனங்களாகஇருந்தாலும் சரி, திட்டமிடாமல் எந்த குறிக்கோளையும் அடைய முடியாது.

பாட புத்தகங்களில் ஏற்படும்சந்தேகங்களை ஆசிரியர்கள் சொல்லித் தருகின்றனர். சிலருக்கு புரியும்; சிலருக்கு புரியாது. புரியாதவற்றை சகமாணவர்கள், ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எந்த செயலுக்கு எந்தெந்த நேரம் ஒதுக்க வேண்டும்என்பதை திட்டமிட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

'தினமலர்' நாளிதழ் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 'ஜெயித்துக் காட்டுவோம்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

எந்தபடிப்பை தேர்வு செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்; எந்த படிப்புக்கு எங்கெங்கு வாய்ப்பு உள்ளது என்பதைவிளக்க நிபுணர்களை கொண்டு இந்நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் மூலமாக சிறந்த கல்விச் சேவையை வழங்கி வருகிறது. இதனை மாணவ,மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் சந்திக்கக் கூடிய மாணவ,மாணவிகளுக்கு வாழ்க்கை நெறிமுறைகள், ஒழுக்க நெறிமுறைகளை கற்றுத் தர வேண்டும். இதுபோன்ற சேவைநிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து நடத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X