கடலுாரில் களைகட்டியது 'தினமலர்- பட்டம்' வினாடி - வினா போட்டி

Added : நவ 22, 2022 | |
Advertisement
கடலுார் : பள்ளி அளவில் 2,300 மாணவ, மாணவியர் பங்கேற்ற 'பதில் சொல்; அமெரிக்காசெல்' என்ற 'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக்பள்ளியில் நேற்று கோலாகலமாக நடந்தது.'தினமலர் நாளிதழ்' பள்ளி மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துகொடுக்கும் வகையில், 'பட்டம்' என்ற மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது.பொது
 கடலுாரில் களைகட்டியது 'தினமலர்- பட்டம்' வினாடி - வினா போட்டி

கடலுார் : பள்ளி அளவில் 2,300 மாணவ, மாணவியர் பங்கேற்ற 'பதில் சொல்; அமெரிக்காசெல்' என்ற 'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக்பள்ளியில் நேற்று கோலாகலமாக நடந்தது.

'தினமலர் நாளிதழ்' பள்ளி மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துகொடுக்கும் வகையில், 'பட்டம்' என்ற மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது.பொது அறிவு,அறிவியல், வரலாறு மற்றும் சமூக தகவல்களுடன், நுண்ணறிவை வளர்க்கும் விதமாக 'பட்டம்'இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுமையத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ்சார்பில், 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற வினாடி - வினா போட்டி ஆண்டுதோறும்நடத்தப்பட்டு வருகிறது.

'தினமலர்' நாளிதழின் புதுச்சேரி பதிப்பு சார்பில், இந்தாண்டு மெகா வினாடி - வினா போட்டி,கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 80 பள்ளிகளில்நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியை, 'தினமலர்' நாளிதழுடன், புதுச்சேரி கோனேரிக்குப்பம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்டு ரிசர்ச் கல்விநிறுவனம் இணைந்து நடத்தி வருகிறது.


2,300 பேர் பங்கேற்புகடலுார் மாவட்டத்தில் 30 பள்ளிகளில் மெகா வினாடி வினா போட்டி நடத்தப்படும் நிலையில்,நேற்று, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளியில் வினாடி வினா போட்டி மாணவர்களின் உற்சாகமான பங்களிப்புடன் கோலாகலமாக நடத்தப்பட்டது.

முதற்கட்டமாக நடத்தப்பட்ட தகுதி சுற்று போட்டியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில்பயிலும் 2,300 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதில், அர்ச்சனா தேவி, ஹேமா வர்ஷிணி, துர்க்கை பாலன், அரிகிருஷ்ணன், ஆகாஷ், ரித்திக்,பர்கனா, கில்மியா நிர்பிட், சிவாணி, சாதனாஸ்ரீ, சாருமதி, சகானத்பர்வீன், கிஷோர் ஜெயின், ஆதித்தியா ராஜன், மனோஜ்குமார், சஞ்சீவ் ஆகிய 16 மாணவ மாணவியர் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்கள் தலா இருவர் என, 8 அணிகளாக நேற்றைய நேரடி மெகா வினாடிவினா போட்டியில் பங்கேற்றனர்.


மாணவர்கள் அசத்தல்இந்த 8 அணியினருக்கும், சாய்ஸ் அடிப்படையில் வினாக்கள் தேர்வு செய்து கேட்கப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 8சவாலான கேள்விகள் வீதம், மொத்தம் 24 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நேரடியாக பதில் அளிக்கும் அணிக்கு தலா 10 மதிப்பெண்களும், பதில்தர தவறிய கேள்விக்கு, சரியான பதில் தரும் அடுத்த அணிக்கு தலா 5 மதிப்பெண்களும்வழங்கப்பட்டன.

இதில், 25 மதிப்பெண்கள் பெற்று ஆகாஷ், ரித்திக் ஆகியோர் இடம் பெற்ற அணிமுதலிடத்தையும், மனோஜ்குமார், சஞ்சீவ் அணி 20 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்பிடித்தது.


சமாதான புறாக்கள்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவை, புதுச்சேரி 'தினமலர்'வெளியீட்டாளர் கி.வெங்கட்ராமன், கலெக்டர் பாலசுப்ரமணியம்,எஸ்.பி., சக்திகணேசன், ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்கல்லுாரியின் நிறுவனர் ஆனந்தன், கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, சமாதான புறாக்களை பறக்கவிட்டனர்.


பதக்கம் வழங்கல்போட்டியில் முதலிடம் பிடித்த ஆகாஷ், ரித்திக் அணிக்கு தங்கப் பதக்கம், கேடயம், சான்றிதழ், இரண்டாம் இடம் பிடித்த மனோஜ்குமார், சஞ்சீவ் அணிக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ்வழங்கி, சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர்.வெற்றி பெற்ற இரு அணியினரும் புதுச்சேரியில் நடத்தப்படும் வினாடி வினா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

அங்கு வெற்றி பெறும் அணியினர், மாநில அளவில் சென்னையில் நடக்கவுள்ள 'பதில் சொல்; அமெரிக்கா செல்' மெகா போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றிபெறும் மாணவர்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துசெல்லப்படுவர்.


நினைவு பரிசுவிழாவில் பள்ளி முதல்வர் நடராஜன் வரவேற்றார்.

புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கி.வெங்கட்ராமன், சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

கிருஷ்ணசாமி பள்ளி சார்பில் விருந்தினர்களுக்கு சாக்லெட் 'பொக்கே'வழங்கப்பட்டது. ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்லுாரி சார்பில், நிறுவனர் ஆனந்தன் சிறப்பு விருந்தினர்களுக்கு சந்தனமாலை அணிவித்து கவுரவித்தார்.


விழிப்புணர்வுநிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற 'பிளாஸ்டிக்ஒழிப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் நீர்நிலைகள்பாதிப்பு, கால்நடைகள் பாதிப்பு, இறுதியில் மனித இனத்திற்கு எந்த அளவிற்கு பிளாஸ்டிக்பயன்பாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காட்டி,அனைவரது பாராட்டையும் பெற்றனர்.


சிறப்பு பரிசுவினாடி வினா போட்டி நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து சரியான விடை கூறிய 6ம்வகுப்பு மாணவிகள் ரியா, ராஜஸ்ரீ, 7ம் வகுப்பு மாணவர் பவனேஷ் ஆகியோருக்கு சிறப்புபரிசாக புத்தக பை வழங்கப்பட்டன.

வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்துமாணவர்களுக்கும், புதுச்சேரி ராஜ்விஜய் டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில் ஹெல்மெட்களை, நிர்வாக இயக்குனர்கள் சீனிவாசமூர்த்தி, உத்திரகுமார், அருண் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ஆதித்யா இன்ஸ்டிடியூட்ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்லுாரியின் மாணவர் ஆலோசகர் உரைகவி ரவி நன்றி கூறினார்.


உற்சாகம் கிடைத்துள்ளது:


'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருந்தேன்.போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்தது சந்தோஷமாக உள்ளது. இந்த போட்டியின்மூலமாக, இதுபோன்ற பல போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற உற்சாகம்கிடைத்துள்ளது. இதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. 'பட்டம்' இதழில் மாணவர்கள் படித்து தெரிந்துக் கொள்ள புதியதகவல்கள் ஏராளமாக உள்ளன. இது, எங்களது திறமைகளை மேலும்வளர்த்துக் கொள்வதற்கு உதவியாக உள்ளது.


கே.ஆகாஷ், பிளஸ் 1வெற்றிக்கு உதவும் 'பட்டம்'


'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் நான் இடம் பெற்ற அணி முதல் பரிசு பெற்றதுமகிழ்ச்சியாக உள்ளது. போட்டியில் பொது அறிவு, வாழ்க்கை குறித்த கேள்விகள் தான்கேட்கப்பட்டன. வாரா வாரம் வரும் 'பட்டம்' இதழை படித்து விடுவேன். அது, எனது வெற்றிக்கு உதவியாக இருந்தது. 'பட்டம்' இதழ் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. 'பட்டம்' இதழ் படிப்பதன் மூலமாக அடுத்தக்கட்ட போட்டியிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


எஸ்.ரித்திக்,பிளஸ் 2'பட்டம்' தொடர்ந்து படிப்பேன்


'பட்டம்' வினாடி- வினா போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக தான் இருந்தது.'பட்டம்' இதழை தொடர்ந்து படித்து வந்ததால் தயக்கமின்றி பதில் அளிக்க முடிந்தது. போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'தினமலர் - பட்டம்' இதழில் உலக செய்திகள், அறிவியல் போன்ற பல தகவல்கள் இருப்பதால், மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள உதவியாக உள்ளது. 'பட்டம்' இதழை தொடர்ந்து படித்து, அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றிபெறுவேன்.


ஏ.எஸ்.மனோஜ்குமார், பிளஸ் 1'பட்டம்' படிக்க ஆர்வம்


'தினமலர் - பட்டம்' இதழ் நடத்திய வினாடி வினா போட்டியில் பங்கேற்று 2ம் இடத்தில் வெற்றி பெற்றது சந்தோஷமாக உள்ளது. போட்டியில் 'பட்டம்' இதழில் இருந்து தான் கேள்விகள் அதிகமாககேட்கப்பட்டன. அதனால், பொது அறிவை வளர்க்கும் 'பட்டம்' இதழை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 'பட்டம்' இதழில் எல்லா துறைகளையும் சார்ந்த தகவல்கள்இடம் பெறுகிறது. இது, மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது.


சஞ்சீவ், 9ம் வகுப்பு


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X