'சட்டசபை தேர்தலையும் எதிர்கொள்வோம்!'

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஈரோடு:''லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்,'' என, பா.ஜ., மாநில துணைLD தலைவர் ராமலிங்கம் கூறினார்.பா.ஜ., கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சக்தி கேந்திர ஆய்வு கூட்டம், நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. பூத் கமிட்டிகளை வலுப்பெறச் செய்து, சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.பின்,

ஈரோடு:''லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்,'' என, பா.ஜ., மாநில துணைLD தலைவர் ராமலிங்கம் கூறினார்.

பா.ஜ., கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சக்தி கேந்திர ஆய்வு கூட்டம், நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. பூத் கமிட்டிகளை வலுப்பெறச் செய்து, சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின், கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், 80 சதவீத வளர்ச்சி, நல்வாழ்வு திட்ட பணிகள் மத்திய அரசு திட்டத்தில் தான் நடக்கிறது. சமீப காலமாக, தமிழக அரசு உள்ளாட்சிகளின் வளர்ச்சி, நல்வாழ்வுக்கு எந்த நிதியும் வழங்குவதில்லை.

நீண்ட நாட்களுக்கு, தி.மு.க., அரசு பயணிக்காது. தமிழகம் போதை பொருள் மையமாக விளங்குகிறது. இதற்கு, மாநில அரசு செயலிழந்து போனது தான் காரணம்.

தமிழக உளவுத் துறை செயலிழந்து உள்ளது. சமீபத்தில் நடந்த கோவை குண்டுவெடிப்பு, பல்வேறு தீவிரவாத செயல்கள் தான் இதற்கு காரணம்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கக் கூடும் என்ற நிலை உள்ளது. லோக்சபா மட்டுமல்ல, சட்டசபை தேர்தலையும் சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X