'டெங்கு' காய்ச்சல் 5,290 பேர் பாதிப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், இந்தாண்டில் இதுவரை 5,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இவ்வகை காய்ச்சல், குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே அதிகரித்த நிலையில், தற்போது ஆண்டு முழுதும் பாதிப்பு இருந்து வருகிறது.அந்த வகையில், 2021ம் ஆண்டில் டெங்கு

சென்னை:தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், இந்தாண்டில் இதுவரை 5,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இவ்வகை காய்ச்சல், குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே அதிகரித்த நிலையில், தற்போது ஆண்டு முழுதும் பாதிப்பு இருந்து வருகிறது.

அந்த வகையில், 2021ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால், 6,039 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தாண்டு ஜன., 1 முதல் நேற்று முன்தினம் வரை 5,290 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக ஜனவரியில் 980 பேர்; பிப்ரவரியில் 684; அக்., 616; செப்., 572 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாதத்தில், நேற்று முன்தினம் வரை, 506 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:

நல்ல நீரில் வளரக்கூடிய, 'ஏடிஸ் ஈஜிப்டி' வகை கொசுவால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது.

வீட்டு மொட்டை மாடி, திறந்தவெளி இடங்களில் கிடக்கும் தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்குவதால், அவ்வகை கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் ஆகின்றன.

எனவே, பொது மக்கள் தங்கள் வீடு சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் சில மாதங்களாக சற்று அதிகமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக அதன் தாக்கம் குறைந்து வருகிறது. 15ம் தேதி டெங்கு காய்ச்சலால் 55 பேர் பாதிக்கப்பட்டனர்.

அது படிப்படியாக குறைந்து, தற்போது 20 என்ற அளவில் சராசரி தினசரி பாதிப்பு உள்ளது.

பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில், மருத்துவ முகாம்கள் நடத்தி, அங்கு மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X