சீட்டு நடத்தி ரூ.24 கோடி 'அபேஸ்' ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது கள்ளத் துப்பாக்கி, 6 தோட்டாக்கள்  பறிமுதல்

Added : நவ 23, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
திருவள்ளூர்:தீபாவளி சிட் பண்ட் நடத்துவதாகக் கூறி, 24 கோடி ரூபாய் மோசடி செய்த நபர், அவர் தந்தை, மனைவி, தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்த, மாளந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி, 33. இவர், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தார்.மாதம், 1,000 ரூபாய் செலுத்தினால், 4 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளி நாணயத்துடன்
 சீட்டு நடத்தி ரூ.24 கோடி 'அபேஸ்' ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது கள்ளத் துப்பாக்கி, 6 தோட்டாக்கள்  பறிமுதல்

திருவள்ளூர்:தீபாவளி சிட் பண்ட் நடத்துவதாகக் கூறி, 24 கோடி ரூபாய் மோசடி செய்த நபர், அவர் தந்தை, மனைவி, தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்த, மாளந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி, 33. இவர், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தார்.

மாதம், 1,000 ரூபாய் செலுத்தினால், 4 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள், மளிகை பொருட்கள் வழங்குவதாகவும்; மாதம் 500 செலுத்தினால், 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்றும் அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார்.

இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து, 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளார்.

தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல், தலைமறைவானார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி, எஸ்.பி., சிபாஸ் கல்யாண் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் சந்திரதாசன், கந்தன் ஆகியோர் தலைமையில் இரண்டு குழு அமைக்கப்பட்டு, மோசடி நபர்கள் குறித்து விசாரித்தனர்.

இத்தனிப் படையினர் தீவிர விசாரணை நடத்தி, செங்குன்றம் அருகே பதுங்கியிருந்த ஜே.பி.ஜோதியை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மதுரை, 65, மனைவி சரண்யா, 25, தம்பி பிரபாகர், 30, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
29-நவ-202213:50:36 IST Report Abuse
மிளிர்வன் அருமையான? வயதுடன் ஒரு குடும்பம்..
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-நவ-202220:50:49 IST Report Abuse
DVRR வேடிக்கை??? இந்த பணம் இவர்கள் கையில் இருக்காது கிறித்துவ மதம் மாற்றிகள் முஸ்லீம் தீவிரவாதிகள் கையில் சென்றிருக்கும் இது தான் இப்போதைய நடைமுறை
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-நவ-202212:36:47 IST Report Abuse
Krishnamurthy Venkatesan rs. 2500 மதிப்புள்ள வெள்ளி நாணயம், சில ஆயிரங்களுக்கு பட்டாசுகள், எவர்சில்வர் பாத்திரங்கள், இனிப்பு, காரம் வகைகள் (மொத்தம் Rs. 22000/- மதிப்பு). இது எப்படி சாத்தியம் என்று ஒருவர் கூட நினைக்க வில்லையே. அதுதான் இங்கு ஆச்சரியம். பேராசை பெரு நட்டம்."
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X