"ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்க வலியுறுத்துவேன்'

Added : செப் 21, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ""ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட்டு, உலகின் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக அது உருவாக வேண்டும். பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்யும்படி வலியுறுத்துவேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், வரும் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். இதற்காக அவர் நேற்று நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.
"ஐ.நா., பாதுகாப்பு சபையை  விரிவாக்க வலியுறுத்துவேன்'

புதுடில்லி: ""ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட்டு, உலகின் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக அது உருவாக வேண்டும். பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்யும்படி வலியுறுத்துவேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், வரும் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். இதற்காக அவர் நேற்று நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவு செயலர் ரஞ்ஜன் மத்தாய் ஆகியோரும் சென்றுள்ளனர். நியூயார்க்கில், ஈரான், ஜப்பான், நேபாளம், தெற்கு சூடான், இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்களை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார்.

நியூயார்க் புறப்படும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், இந்தியா தற்போது தற்காலிக உறுப்பினராக உள்ளது. விரைவில் ஐ.நா., சபையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட வேண்டும். உலகின் சக்தி வாய்ந்த அமைப்பாக ஐ.நா., செயல்பட வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்யும்படி வலியுறுத்தேன். ஐ.நா., பாதுகாப்பு சபையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தரமற்ற உறுப்பினராக இடம் பெற்றுள்ள இந்தியா, உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து குரல் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagaraj - madurai ,இந்தியா
22-செப்-201108:50:21 IST Report Abuse
nagaraj இந்தியாவின் பாதுகாப்பையே......உறுதியாக்க முடியவில்லை
Rate this:
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
22-செப்-201100:39:46 IST Report Abuse
Kunjumani என்னாத்துக்கு? உன்னால் முடியுமா? சும்மா ஒரு பேச்சுக்கு கேட்கிறேன், நீ சோனியா கட்சியில் எதையாவது வலியுறுத்த முடியுமா? அதை விடுயா, மானமிகு ராசாவை ராஜினமா செய்ய வலியுறுத்த முடிந்ததா உன்னால்? ஏதோ எங்கள் தானை தலைவர் பெரிய மனது பண்ணி மானமிகு ராசாவை ராஜினமா செய்ய வைத்தார். உனக்கு என்னாத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு சபை விசயமெல்லாம்.. அதெல்லாம் தானை தலைவரும், சோனியாவும் ஒபாமாவிடம் பேசிக்கொள்வார்கள், ஏதோ ஜாலியா அமேரிக்கா போனோமா, வந்தோமா என்று இருக்கோணும்..புரியுதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X