புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:ராமேஸ்வரத்தில் இருந்து, கடல் வழியாக இலங்கைக்கு, மீன்பிடி படகில் கடத்தப்பட்ட, 300 கிலோ கஞ்சா, 500 கிராம் கஞ்சா எண்ணெயை, கடற்படையுடன் இணைந்து, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.இலங்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க நிதிதிரட்டும் நோக்கில், தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய
 புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு

சென்னை:ராமேஸ்வரத்தில் இருந்து, கடல் வழியாக இலங்கைக்கு, மீன்பிடி படகில் கடத்தப்பட்ட, 300 கிலோ கஞ்சா, 500 கிராம் கஞ்சா எண்ணெயை, கடற்படையுடன் இணைந்து, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

இலங்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க நிதிதிரட்டும் நோக்கில், தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு அமைப்பினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

அதற்கேற்ப, 2021ல், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, விழிஞ்ஞம் கடற்பகுதியில், இலங்கைக்கு படகில் கடத்த இருந்த, 300 கிலோ ஹெராயின், 'ஏகே 47' துப்பாக்கி மற்றும், 1,000 தோட்டாக்களை கைப்பற்றினர். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னணியில், விடுதலை புலிகள் அமைப்பினர் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக, சென்னை வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா தாஜ் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த, சபேசன், 47, கைது செய்யப்பட்டார். இவர், புலிகள் உளவு அமைப்பின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர்.

இவர் அளித்த வாக்குமூலத்தில், 'விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க, போதை பொருள் கடத்தல் வாயிலாக, நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்' என, கூறியுள்ளார்.

மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து, கடல் வழியாக ஒரு கும்பல், இலங்கைக்கு போதை பொருள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இரு தரப்பினரும் கூட்டாக கண்காணித்து, ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, 300 கிலோ கஞ்சா, 500 கிராம் கஞ்சா எண்ணெயை கடத்திய, மீன்பிடி படகை, நேற்று முன்தினம் சுற்றி வளைத்தனர். இது தொடர்பாக, நால்வர் கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், புலிகள் அமைப்புக்கு நிதி திரட்ட போதை பொருள் கடத்தல் நடப்பது தெரிய வந்துள்ளது.

முழுமையான விசாரணைக்கு பின், இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து தெரியவரும் என, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X