தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை அரிட்டாபட்டி அறிவிப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக, மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி கிராமம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள, 477.24 ஏக்கர் நிலப்பரப்பை, அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக, உயிரிய பன்முகச் சட்டம் - 2002ன் கீழ், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம்.அரிட்டாபட்டி

சென்னை:தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக, மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி கிராமம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள, 477.24 ஏக்கர் நிலப்பரப்பை, அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக, உயிரிய பன்முகச் சட்டம் - 2002ன் கீழ், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம்.

அரிட்டாபட்டி கிராமம், ஏழு சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்ட பகுதி. மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு, இப்பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

இப்பகுதியில், 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், மூன்று தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, 16ம் நுாற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது.

மலைப் பகுதிகளில், 250 பறவை இனங்கள் உள்ளன. இதில், லகர் ராசாளி, ஹாஹீன் ராசாளி, ராசாளி பருந்து ஆகிய மூன்று முதன்மையான கொன்றுண்ணி பறவையினங்கள் உள்ளன.

எறும்பு தின்னிகள், மலைப்பாம்பு, அரிய வகை தேவாங்கு ஆகிய வன விலங்குகளும் உள்ளன. இப்பகுதி, பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

சமண சிற்பங்கள், சமண படுகைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள் உள்ளன.

இந்த வரலாற்று சின்னங்கள், இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கின்றன.

அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க, கடந்த 2019ல் நடவடிக்கை துவங்கியது. கிராம ஊராட்சிகள், மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்கு பின், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கான அரசாணை, நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு, உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன், பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும்.

இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்று களஞ்சியத்தை பாதுகாக்க உதவும் என, வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹுதெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X