முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுப்பு

Added : நவ 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2016 மார்ச் முதல், 2018 பிப்., 6 வரை, பாரதியார் பல்கலை துணைவேந்தராக, டாக்டர் கணபதி பதவி வகித்தார். பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாகவும், பல்கலை மானியக் குழு விதிகளை மீறியதாகவும், லட்சக்கணக்கில் பணம்

சென்னை:பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 2016 மார்ச் முதல், 2018 பிப்., 6 வரை, பாரதியார் பல்கலை துணைவேந்தராக, டாக்டர் கணபதி பதவி வகித்தார்.

பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாகவும், பல்கலை மானியக் குழு விதிகளை மீறியதாகவும், லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும், துணைவேந்தருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

இதையடுத்து, துணைவேந்தராக பதவி வகித்த கணபதி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக, 2021 ஆகஸ்டில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் டாக்டர் கணபதி மனுத் தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'எங்கே, எப்போது, எப்படி, பணம் கோரப்பட்டது; எப்படி பணம் கொடுக்கப்பட்டது போன்ற விபரங்கள், முதல் தகவல் அறிக்கையில் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு பின், வழக்கு பதியப்பட்டு உள்ளது' என்றார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.உதயகுமார், ''தேர்வுக்குழு உறுப்பினர்களின் உதவியுடன், ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார்.

''சிண்டிகேட் கூட்டத்தை கூட்ட வேண்டாம்; தேர்வு நடவடிக்கைகளை தொடர வேண்டாம் என அரசு கூறியும், கூட்டத்தை கூட்டியுள்ளார். முறையற்ற தேர்வு பட்டியலுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:

தற்போது, புலன் விசாரணை நடக்கிறது. இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து, ஆசிரியர்கள் தேர்வு நடவடிக்கைகளில் பின்னப்பட்ட சதி உறுதியாகிறது.

ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள் வாயிலாக, தங்களை வளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, தகுதியற்றவர்களை வேலையில் நியமிக்கின்றனர்.

தகுதியானவர்களுக்கு, வேலை மறுக்கப்படுகிறது. இதனால், கல்வி முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்.

கல்லுாரி, பல்கலையில் வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களின் கனவு தகர்ந்துள்ளது. இந்த செயல்களை, முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள், நம்பகத்தன்மையை இழந்து விடும்.

புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால், வழக்கை ரத்து செய்ய முடியாது; விசாரணைக்கு முட்டுக்கட்டை போட முடியாது.

குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஆதாரங்களை பரிசீலிக்கும்போது, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு, இது தகுதியான வழக்கு அல்ல. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
23-நவ-202203:45:44 IST Report Abuse
John Miller கணபதியை சீக்கிரம் உள்ளே போட்டு கஞ்சி கொடுங்கள் அபிஸேர்ஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X