கேபிள் தொழிலை கைப்பற்ற முயற்சி தி.மு.க., அரசுக்கு பா.ஜ., கண்டனம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:'அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தை முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை கைப்பற்ற முயற்சி செய்பவர்களுக்கு, தி.மு.க., அரசு உதவுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த அறிக்கை:தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது.இரண்டு நாட்களாக, 20 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களை கொண்ட,

சென்னை:'அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தை முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை கைப்பற்ற முயற்சி செய்பவர்களுக்கு, தி.மு.க., அரசு உதவுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த அறிக்கை:

தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது.

இரண்டு நாட்களாக, 20 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களை கொண்ட, அரசு கேபிள், 'டிவி' நிறுவன ஒளிபரப்பில் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது, 2006 - 11 கொடுங்கோல் ஆட்சியை, மக்களுக்கு நிச்சயம் நினைவுபடுத்தி இருக்கும்.

பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த, 'ஹாத்வே' கேபிள் நிறுவன கேபிள்களை அறுத்தனர்; அடியாட்களை வைத்து, கேபிள் ஆப்பரேட்டர்களை மிரட்டினர்.

தமிழகத்தை விட்டே அந்நிறுவனத்தை விரட்டி, கேபிள் தொழிலை, தி.மு.க.,வின் குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன், தங்கள் ஏகபோக உரிமையாக மாற்றியது.

தற்போது, அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கி, மீண்டும் கேபிள் தொழில் மொத்தமாக கைப்பற்ற முயற்சிப்பதும், அரசு கேபிள் ஒளிபரப்பில் தடைகளை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களுக்கு, தி.மு.க., அரசு உதவுவதும் கண்டிக்கத்தக்கது.

கடந்த, 2006 - 2008ல் கோபாலபுர குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால், சுமங்கலி கேபிள் நிறுவனம் முடங்கியது. பின், மீண்டும் தலைதுாக்கிய அந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு, தி.மு.க., அரசு உதவியது.

ஹாத்வே, 2010ல் தமிழகத்தில் தொழில் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று வணிக செயல்பாடுகளை நிறுத்தி விட்டது.

தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷன் போன்ற தங்கள் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, இதற்கு முன் தனியார் நிறுவனங்களை பலிகொடுத்த தி.மு.க., தற்போது, அரசு நிறுவனத்தை பலி கொடுக்க நினைக்கிறது.

திறனற்ற தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை, தமிழக பா.ஜ., வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X