பிரிவினைவாதத்திற்கு தி.மு.க., ஆதரவு வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஊட்டி:''தேசத்துக்கு எதிரான மனநிலையை தி.மு.க., உருவாக்கி வருவதால் சிறுபான்மை இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர்,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் தி.மு.க., - காங்., - கம்யூ., கட்சிகள், சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக, மத்திய பா.ஜ., அரசு மீது பொய் பிரசாரம் செய்து
 பிரிவினைவாதத்திற்கு தி.மு.க., ஆதரவு வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு

ஊட்டி:''தேசத்துக்கு எதிரான மனநிலையை தி.மு.க., உருவாக்கி வருவதால் சிறுபான்மை இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர்,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தி.மு.க., - காங்., - கம்யூ., கட்சிகள், சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக, மத்திய பா.ஜ., அரசு மீது பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

இதை உடைத்தெறிந்து, சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ., பாதுகாவலன் என்பதை தெளிவுபடுத்த, மாநில முழுதும் ஆய்வுக்கூட்டம் நடத்தி, வரும் லோக்சபா தேர்தலில் சிறுபான்மை அணியின் கட்டமைப்பை பலப்படுத்த உள்ளோம்.

தேசத்துக்கு எதிரான, பிரிவினைவாதத்திற்கு ஆதரவான மனநிலையை தி.மு.க., உருவாக்கி வருவதால், சிறுபான்மை இளைஞர்கள், ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர்.

இதுதொடர்ந்தால், தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும்.

அமைதி பூங்காவான தமிழகம், நாளை ஒரு அபாய சூழலை சந்திக்கும். மத அரசியலை விட்டு தி.மு.க., வெளியே வர வேண்டும்.

நம் நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

லோக்சபா தேர்தலில், நீலகிரி தொகுதியில் பா.ஜ.,வுக்கு வெற்றி நிச்சயம். இங்குள்ள மக்களின் ஆதரவு, பா.ஜ.,வுக்கு பெருகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X