கடலில் கரைந்தது காற்றழுத்தம் தமிழகத்தை ஏமாற்றியது மழை

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:வடமாநிலங்களில் இருந்து வீசிய பனிக்காற்றால், நிலப்பகுதியின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, மிதமான மழை கூட பெய்யாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால், கன மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:தென் மேற்கு மற்றும் அதையொட்டிய, மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த

சென்னை:வடமாநிலங்களில் இருந்து வீசிய பனிக்காற்றால், நிலப்பகுதியின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, மிதமான மழை கூட பெய்யாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால், கன மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:

தென் மேற்கு மற்றும் அதையொட்டிய, மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தென் மேற்கு வங்க கடலில், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இது, மேலும் வலுவிழந்து, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

இதனால், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல், வரும் 26ம் தேதி வரை ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன், பனி மூட்டமாக காணப்படும்.

சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 25 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.

நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, செஞ்சியில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. மரக்காணம், வந்தவாசி, விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


எச்சரிக்கை வாபஸ்



வங்க கடலில், 16ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆறு நாட்களாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தமிழக கடலோர பகுதியை நேற்று நெருங்கியது.

இந்த தாழ்வு மண்டலத்தால், வட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், நிலப்பகுதியில் நிலவிய குளிர்ந்த சூழலின் காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப் பெறாமலும், கரையை நோக்கி நகர முடியாமலும், கடலிலேயே வலு குறைந்து விட்டதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், எதிர்பார்த்த மழை பெய்யாமல், கன மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.


பனிக் காற்று



வானிலை மாற்றம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

வங்க கடலுக்குள் தமிழக பகுதியை நோக்கி, காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில், வட மாநிலங்களில் இருந்து, இயல்பை விட அதிக அளவு பனி மூட்டம் கலந்த குளிர்காற்று, தமிழக நிலப் பகுதி வரை வீசியது.

கடலிலும் அதேபோன்று குளிர்ந்த காற்று குறுக்கிட்டதால், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வில் தாமதம் ஏற்பட்டது.

இந்த காலகட்டத்தில், பூமியில் இருந்து வெளியேறும் வெப்ப அலைகளின் அளவும் அதிகரித்தது. இந்த காலகட்டத்தில், நிலப் பகுதியில் குளிர்ந்த தரைக்காற்று, இயல்புக்கு மாறாக அதிக அளவு வீசியது.

அதேநேரம், வட மாநிலங்களில் இருந்து வீசிய பனிக்காற்றும், தமிழக நிலப் பகுதியில் மாற்றம் ஏற்படுத்தியது. இதனால், சென்னையில் இயல்பை விட அதிகபட்சம் ஐந்து டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை குறைந்தது.

இந்த வானிலை மாற்றங்களால், நிலப் பகுதியில் பனிமூட்டத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால், சூரிய வெளிச்சம் நிலப்பகுதியில் விழாமல், வெப்பத்தின் அளவு சரிந்தது.

இதுபோன்ற பல்வேறு வானிலை மாற்றத்தின் காரணங்களால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப் பகுதியை நோக்கி ஈர்க்கப்படாமல், கடலிலேயே மழையை கொட்டி வலுவிழந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், மூன்று நாட்களாக குளிர்ந்த சூழல் நிலவிய நிலையில், நேற்று பகலில் சில நேரங்களில் வெயில் தலை காட்டியது.

ஆனாலும், பெரும்பாலான நேரங்களில் வானம் பனிமூட்டமாகவும், மேக மூட்டமாகவும் கலந்து காணப்பட்டது. நிலப் பகுதியில் குளிர்ந்த சூழலே நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X