மாண்டியா : பாட்டிக்கு துாக்க மாத்திரை கொடுத்து, பேத்தியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மாண்டியா நாகமங்களா அருகே உள்ள பெல்லுார் கிராசை சேர்ந்தவர் யூசுப், 25. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவிக்கு புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்து அடிக்கடி பேசினார்.
'வாட்ஸ் ஆப்' வீடியோ காலில் பேச வைத்து, அவரது ஆபாச படங்களை எடுத்து வைத்து கொண்டார். பின் அந்த படங்களை காண்பித்து, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மறுத்தால் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். மாணவி, பாட்டியின் வீட்டில் இருந்தார். அப்போது மாணவியிடம் யூசுப் வலுக்கட்டாயமாக துாக்க மாத்திரையை கொடுத்து, பாட்டியின் சாப்பாட்டில் கலக்க வைத்தார்.
இதை சாப்பிட்டு பாட்டி துாங்கிய பின், வீட்டுக்குள் நுழைந்து, மாணவியை பலாத்காரம் செய்தார். இதன்பின் மதம் மாறினால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இது குறித்து மாணவி, பெற்றோரிடம் கூறினார். அவர்கள், போலீசில் புகார் செய்தனர். யூசுப் நேற்று கைது செய்யப்பட்டார்.
மிக்சர் சாப்பிட்டு ஸ்கூட்டர் 'ஆட்டை' மர்ம நபருக்கு போலீஸ் வலை
மயிலம் : மயிலத்தில் பேக்கரி கடை உரிமையாளரின் பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலம், புதுச்சேரி சாலையைச் சேர்ந்தவர் வீரமணி, 54; இவர், வீட்டின் எதிரே பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மதியம் டி.வி.எஸ்., மொபெட்டில் வந்த நபர் பேக்கரியில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, வீரமணியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
பின், கடையில் மிச்சர் வாங்கி, அவரது மொபட் மீது அமர்ந்து மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீரமணி கடைக்குள் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரது 'ஆக்டிவா' ஸ்கூட்டரைக் காணவில்லை. மிக்சர் சாப்பிட்ட ஆசாமி ஓட்டி வந்த மொபட் மட்டும் அங்கு இருந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்
திண்டிவனம் : வானுார் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
வானுார் பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக நேற்று காலை திண்டிவனம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், வனச்சரகர் அஸ்வினி தலைமையில் வனவர் திருமலை மற்றும் வனக்காப்பாளர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வானுார் அடுத்த துருவை கிராம ஏரிக்கரை பகுதியில், 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.
அவர்களை சோதனை செய்ததில், துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்பட்ட பறவைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், புதுச்சேரி, கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த தோகைப்பாடி மகன் முருகன், 27; மொய்தீன் மகன் பிரபு, 38; என தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த நத்தை கொத்தி, கொக்கு உட்பட 22 பறவைகள் மற்றும் நாட்டு துப்பாக்கி, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
4வது மனைவி கொலை: 'குடிகார' கணவர் கைது
ராம்நகர்: குடிபோதையில் நான்காவது மனைவியை, கட்டையால் அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
ராம்நகர் அருகே உள்ள அவரேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் போரய்யா, 45. இவர் இங்குள்ள மாந்தோப்பில் தன் நான்காவது மனைவி பத்ரம்மாவுடன், 30 வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது குடித்திருந்தனர். நள்ளிரவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த போரய்யா, அங்கிருந்த கட்டையால் அடித்து மனைவியை கொன்றார்.
![]()
|
போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
போரய்யா முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தெரியாமல், மூன்றாவது திருமணம் செய்திருந்தார்.2014ல் இரண்டாவது மனைவியுடன், ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொன்றதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆறு ஆண்டு சிறைவாசத்துக்கு பின், 2020ல் விடுதலையானார். பின் பத்ரம்மாவை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. தற்போது இவரையும் அடித்து கொன்றதால், போலீசார் கைது செய்துள்ளனர்.
நண்பரை அடித்து கொன்றவர் உடலுடன் போலீசில் சரண்
ராமமூர்த்தி நகர்: நண்பரை கொன்று உடலை காரில் எடுத்து வந்தவர், போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
மைசூரு நஞ்சன்கூடை சேர்ந்தவர் மகாதேவப்பா, 45 என்பவர், பெங்களூரு ராமமூர்த்தி நகரின் ஜெயந்தி நகரில் வசித்தார். அப்போது ராஜசேகரன், 42 என்பவர் அறிமுகமானார். இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.
மகாதேவப்பா, வங்கியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் இருந்து பணம் வாங்கி இருந்தார். இந்த விவகாரங்களில் ராஜசேகர், அவரது தாய் சுவிதா, 65 உதவியாக இருந்தனர்.
ஆனால் மகாதேவப்பா யாருக்கும் கடன் வாங்கி தரவில்லை; வாங்கிய பணத்தை திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டார்.
![]()
|
இதனால் பணம் கொடுத்தவர்கள், திருப்பி தருமாறு ராஜசேகருக்கு நெருக்கடி அளித்தனர். எனவே தன் வீட்டை விற்று 1.50 கோடி ரூபாய்வரை பணத்தை கொடுத்தார். பின், மகாதேவப்பாவை தேடினார்.
அவர் நஞ்சன்கூடு அருகே உள்ள ஹிமனகுன்டி கிராமத்தில் இருப்பது தெரியவந்தது.
கடந்த 20ம் தேதி மகாதேவப்பாவை தேடி சென்றார். அங்கிருந்த மகாதேவப்பாவை காரில் அழைத்து கொண்டு பெங்களூரு வந்தார்.
வழியில் அன்று இரவு அவலஹள்ளி என்ற இடத்தில், பணத்தை ஏமாற்றியது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, இரும்பு தடியால் மகாதேவப்பா தலையில் ராஜசேகர் சரமாரியாக தாக்கினார். படுகாயம் அடைந்தவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
அதிகாலை வரை, அவரை காரில் வைத்து சுற்றினார். நேற்று முன்தினம் காலையில் பார்த்தபோது மகாதேவப்பா இறந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த ராஜசேகர், நேற்று முன்தினம் முழுக்க, காரில் மகாதேவப்பா உடலை வைத்திருந்தவர், இரவு ராமமூர்த்தி நகருக்கு வந்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
தாக்குதல் நடத்த பயன்படுத்திய இரும்பு தடியையும் ஒப்படைத்தார். ராஜசேகரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
சீனாவில் தீ விபத்து: 38 பேர் பரிதாப பலி
பீஜிங்: சீனாவில், ஒரு தொழிற்சாலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ௩௮ பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவின், ஹெனான் மாகாணம், வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங்கில் ஒரு தொழிற்சாலையில், நேற்று முன் தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, ௬௩ தீயணைக்கும் வாகனங்களுடன் வந்த ௨௪௦ வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தும் இந்த விபத்தில் ௩௮ பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேகத்துக்கு இடமான சிலரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ௨௦௧௫ல், சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில், ௭௦௦ டன் 'சோடியம் சயனைடு' வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ௧௭௦ பேர் பலியாகினர்; ௭௦௦ பேர் காயமடைந்தனர்.
அஜாக்கிரதை காரணமாக, சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
நகை பறித்து தப்பிய பெண்ணை துரத்திப்பிடித்த கோர்ட் ஊழியர்
கோவை: ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பியோடிய பெண்ணை, கோர்ட் பெண் ஊழியர் துரத்திப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
கோவை தெலுங்குபாளையம் பனைமரத்துாரை சேர்ந்த ஜெயராமன் மனைவி ஹேமலதா, 40. மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் 21ம் தேதி மாலை 5:00 மணிக்கு, அவிநாசி சாலையில் சென்ற ஆர்.எம்.கே., தனியார் பஸ்சில், பயணித்துக் கொண்டிருந்தார். குப்புசாமி நாயுடு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கும் நேரத்தில், அருகே இருந்த பெண் ஒருவர், திடீரென ஹேமலதா அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு, பஸ்சில் இருந்து குதித்து இறங்கி விட்டார்.
அதிர்ச்சியடைந்த ஹேமலதாவும், பஸ்சிலிருந்து இறங்கி அவரை துரத்தினார். அருகே இருந்தவர்களின் உதவியுடன், அந்த பெண்ணை மடக்கிப்பிடித்தார். அவரிடம் இருந்த தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட பெண், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அந்த பெண், திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சங்கீதா, 36, என்று தெரியவந்தது.
அந்த பெண்ணுக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்று இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.