பா.ஜ.,வில் அதிரடி நடவடிக்கைகள் தொடரும்: அண்ணாமலை

Updated : நவ 23, 2022 | Added : நவ 23, 2022 | கருத்துகள் (79) | |
Advertisement
சென்னை: பா.ஜ.,வில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என அக்கட்சியின் மாநில செயலாளர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், பா.ஜ., நாகரீகமான அரசியல் செய்து வருகிறது. தமிழக பா.ஜ.,வின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது. தமிழக பா.ஜ.,வில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை உண்டு. கட்சியை
annamalai, BJP, tnbjp, bjp leader annamalai, suryasiva,  அண்ணாமலை, பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜ,

சென்னை: பா.ஜ.,வில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என அக்கட்சியின் மாநில செயலாளர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னை தேனாம்பேட்டையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், பா.ஜ., நாகரீகமான அரசியல் செய்து வருகிறது. தமிழக பா.ஜ.,வின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது. தமிழக பா.ஜ.,வில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை உண்டு. கட்சியை வளர்க்கும் பணி எனக்கு இருப்பதால், இடையூறாக இருப்பவர்கள் நீக்கப்படுவார்கள்.


சூர்யா சிவா தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக பா.ஜ.,வில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆரம்பம் மட்டும் தான். பா.ஜ.,வில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.


latest tamil news



அதிமுக பாஜ., இடையிலான கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தில் 25 எம்.பி., தொகுதிகளை தேர்ந்தெடுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ஜ.,வுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து தற்போது பேச முடியாது. ஆன்லைன் ரம்மி என்பது தடை செய்யப்பட வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நிலைப்பாடு.


பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வெளியேறுமா என்பது தொடர்பான கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக பாஜ., தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. தமிழக பாஜ., பஸ் போல தான். பழையவர்களை இறக்கிவிட்டால், தான் புதியவர்கள் ஏற முடியும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
23-நவ-202222:24:30 IST Report Abuse
g.s,rajan தமிழகத்தில் அண்ணாமலை பிஜேபி கட்சிக்கு பால் ஊத்தாம போக மாட்டார் போல இருக்கு .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-நவ-202221:05:58 IST Report Abuse
g.s,rajan சினிமாவில் வருவது போல மேலே பறந்து ,பறந்து அதிரடியா தாக்குவாரா ??? ...
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
23-நவ-202219:37:32 IST Report Abuse
Thomas சூர்ய சிவா சொன்னது போல, "அட்ஜஸ்ட்" செய்தால் கட்சியில் பதவி என்கிற அதிரடி தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X