பசுமை கட்டடங்களுக்கு புதிய மதிப்பீட்டு முறை

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கட்டப்படும் பசுமை கட்டடங்களுக்கு, எரிசக்தி பயன்பாடு அடிப்படையில், புதிய மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.தமிழகத்தில், வழக்கமான கான்கிரீட் அடிப்படையிலேயே, அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில், சிமென்ட், அதிக எரிசக்தி பயன்பாடு போன்ற விஷயங்களால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே,

சென்னை:சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கட்டப்படும் பசுமை கட்டடங்களுக்கு, எரிசக்தி பயன்பாடு அடிப்படையில், புதிய மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில், வழக்கமான கான்கிரீட் அடிப்படையிலேயே, அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில், சிமென்ட், அதிக எரிசக்தி பயன்பாடு போன்ற விஷயங்களால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சிமென்ட் தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்துதல், எரிசக்தி பயன்பாடு குறைத்தல் ஆகிய அம்சங்கள் உள்ள கட்டடங்கள், பசுமை கட்டடங்களாக வகைபடுத்தப் படுகின்றன.

ஒவ்வொரு கட்டடமும் எதை பயன்படுத்தி கட்டப்பட்டது; அது தற்போது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற அடிப்படையில், எந்த வகை பசுமை கட்டடம் என்பது தீர்மானிக்கப்படும். இதற்காக தேசிய, சர்வதேச அளவில், பல்வேறு அமைப்புகள் மதிப்பீடுகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், தமிழக அளவில் எரிசக்தி பயன்பாட்டு குறியீடுகள் அடிப்படையில், பசுமை கட்டடங்களை மதிப்பீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழிமுறைகளை உருவாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

தனி நபர் பயன்பாட்டுக்கான சிறிய கட்டடங்கள் முதல், அடுக்குமாடி கட்டடங்கள் வரை, அனைத்துக்கும் ஏற்ற வகையிலான, புதிய மதிப்பீடுகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X