சென்னை:அடுத்த கல்வி ஆண்டுக்கான இலவச பாட புத்தகங்களின் விபரங்களை தெரிவிக்குமாறு, பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், புத்தகப் பை, வண்ண பென்சில்கள், லேப் டாப், சைக்கிள் என, 14 வகை வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், வரும், 2023- - 24ம் கல்வி ஆண்டுக்கு தேவையான, இலவச பாட புத்தகங்களின் உத்தேச விபரங்களை, பள்ளிகள் பட்டியலாக தெரிவிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் சார்பில், புத்தகங்களை முன்கூட்டியே அச்சடிக்கும் பணிகளுக்காக, இந்த பட்டியல் பெறப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.