விமான நிலையத்தில் களப்பணிக்கு கூடுதலாக 2 நிறுவனங்கள் நியமனம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்தில் களப்பணிகளை மேற்கொள்ள, கூடுதலாக இரண்டு தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்கியதும், உடைமைகளை கையாளுதல், பயணியரை அழைத்து செல்லுதல் போன்ற களப் பணிகளில் ஈடுபட, கூடுதல் ஒப்பந்த நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டுமென, விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கை

சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்தில் களப்பணிகளை மேற்கொள்ள, கூடுதலாக இரண்டு தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.

சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்கியதும், உடைமைகளை கையாளுதல், பயணியரை அழைத்து செல்லுதல் போன்ற களப் பணிகளில் ஈடுபட, கூடுதல் ஒப்பந்த நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டுமென, விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் களப்பணிகளை மேற்கொள்ள, கூடுதலாக இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், களப்பணிகளை மேற்கொள்ள, கூடுதலாக இரண்டு தனியார் நிறுவனங்கள் டெண்டர் வாயிலாக, தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த இரு நிறுவனங்கள் புதுடில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கியமான விமான நிலையங்களில் பணியாற்றி வருகின்றன.

இதற்கிடையே, இந்த இரு நிறுவனங்களும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தங்கள் பணியை துவங்க உள்ளன. பயணியர் மற்றும் அவரின் பொருட்களை கையாள, அதிக பணியாளர்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் கையாளுவதால், பயணியர் தங்கள் நேரத்தை சேமிக்க முடியும்.

இது, விமான நிலையத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பாதுகாப்பையும் மேம்படுத்தும்.

மேலும், இந்த இரண்டு நிறுவனங்கள் செயல்படத் துவங்குவதால், 4,000பேர் பணியில் சேர்க்கப்படுவர் என்பதால், வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த இரு நிறுவனங்களும், அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் தங்கள் பணியை துவங்கும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X