ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க பிஸ்கட் நிறுவனத்துக்கு உத்தரவு

Added : நவ 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:சேவை குறைபாடுடன் செயல்பட்ட தனியார் பிஸ்கட் உற்பத்தி நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை எம்.எம்.டி.ஏ., பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர், அப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு உணவளிக்க, மணலியில் உள்ள கடையில், முன்னணி நிறுவனத்தின், 25 பாக்கெட் பிஸ்கட்டை வாங்கினார்.

சென்னை:சேவை குறைபாடுடன் செயல்பட்ட தனியார் பிஸ்கட் உற்பத்தி நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எம்.எம்.டி.ஏ., பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர், அப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு உணவளிக்க, மணலியில் உள்ள கடையில், முன்னணி நிறுவனத்தின், 25 பாக்கெட் பிஸ்கட்டை வாங்கினார்.

பாக்கெட்டுகளை திறந்தபோது, ஒவ்வொரு பாக்கெட்டுகளிலும், 16 பிஸ்கட்டுக்கு பதில், 15 பிஸ்கட்கள் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, பிஸ்கட் விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் உற்பத்தி செய்த தனியார் நிறுவனத்திடம், டில்லிபாபு புகார் அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்காததால், திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனு விபரம்:

தினமும் குறைந்தபட்சம் ஒரு கோடி பிஸ்கட் பாக்கெட்டுகளை நிறுவனம் விற்பனை செய்கிறது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாக பிஸ்கட்டுகள் உள்ளன. ஒரு பிஸ்கட்டின் விலை, 75 பைசா.

மூன்று மாதத்தில் விற்பனை செய்த பிஸ்கட் வாயிலாக, 29 கோடி ரூபாய் வரை, வாடிக்கையாளர்களை நிறுவனம் மோசடி செய்துஉள்ளது.

எனவே, அந்த நிறுவனத்துக்கு அபராதமாக, 100 கோடி ரூபாயும், சேவை குறைபாடுக்கு இழப்பீடாக, 10 கோடி ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைவர் லதா மகேஸ்வரி, உறுப்பினர் ஜெயசங்கர் பிறப்பித்த உத்தரவு:

நிறுவனம் மற்றும் கடை உரிமையாளர் நியாயமான முறையில் வர்த்தகத்தை மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு பாக்கெட்டிலும் குறைவான எண்ணிக்கையில் பிஸ்கட் இருந்துள்ளது.

எனவே, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக, 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக, நிறுவனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
24-நவ-202211:12:44 IST Report Abuse
jayvee எனோ தானோ என்று வழங்கப்பட நீதி.. மொத்தத்தில் அந்த பிஸ்கேட் நிறுவனம் எவ்வளவு கோடிகள் ஏமாறிருக்கும் ? அதை ஏன் இந்த நீதி பத்தி கருத்தில் கொள்ளவில்லை.. விசாரணைக்கு ஆணைடவில்லை ? பாவ மன்னிப்பு கிடைத்துவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X