'பீக் ஹவர்' மின் கட்டணம் தொழில் துறையினர் அதிர்ச்சி

Added : நவ 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்:'பீக் ஹவர்' என்ற புதிய மின் கட்டணத்தால், திருப்பூர் பனியன் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் தொழில் துறையினர் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, சாய ஆலைகளும், பிரின்டிங் நிறுவனங்களும் நேரடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு

திருப்பூர்:'பீக் ஹவர்' என்ற புதிய மின் கட்டணத்தால், திருப்பூர் பனியன் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் தொழில் துறையினர் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, சாய ஆலைகளும், பிரின்டிங் நிறுவனங்களும் நேரடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, நிலை கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துஉள்ளது.

பிரின்டிங் மற்றும் சாய ஆலைகளுக்கு மின் கட்டணமும், நிலை கட்டணமும் பெரும் சுமையாக இருந்து வருகிறது. தற்போது, 'பீக் ஹவர்' மின் கட்டணம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

காலை மற்றும் மாலையில், 6:00 முதல், 10:00 மணி வரை, 'பீக் ஹவர்' என்று பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு, கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.

பெரும் தொகையை கட்டணமாக செலுத்தும் பனியன் நிறுவனங்கள், கட்டணத்தில், 15 சதவீதத்தை, 'பீக் ஹவர்' கட்டணமாக செலுத்தியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கமான, 'டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:

பனியன் தொழிலில், 50 சதவீதத்துக்கும் குறைவான உற்பத்தி நடந்து வருவதால், மின் கட்டண உயர்வு பாதிப்பு வெளியே தெரியவில்லை. நிலை கட்டணம், மூன்று மடங்கு உயர்ந்ததை ஜீரணிக்க முடியவில்லை.

அதற்குள், 'பீக் ஹவர்' கட்டணம் என்ற புதிய கட்டண விதிப்பால், உற்பத்தி செலவு பலமடங்கு உயரும் அபாயம் இருக்கிறது. தொழில் துறையினர் ஒன்றிணைந்து, தமிழக முதல்வரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
24-நவ-202211:13:51 IST Report Abuse
jayvee துக்ளக் ஆட்சியில் அலிபாபா மந்திரி ஆனால் இப்படி நடக்கும் என்று கேள்வி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X