சாலையில் மாடுகள் திரிந்தால் ரூ.1,000 அபராதம் மாநகராட்சி பொது சுகாதார கூட்டத்தில் தீர்மானம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஓசூர்:''ஓசூர் மாநகராட்சி பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால், அதன் உரிமையாளருக்கு, 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,'' என, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த, பொது சுகாதாரக்குழு கூட்டத்தில், தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:ஓசூர்

ஓசூர்:''ஓசூர் மாநகராட்சி பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால், அதன் உரிமையாளருக்கு, 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,'' என, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த, பொது சுகாதாரக்குழு கூட்டத்தில், தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:

ஓசூர் மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே, சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளருக்கு முதலில், 1,000 ரூபாயும், மீண்டும் அதே மாடு சுற்றித்திரிந்தால், 3,000 ரூபாய், அதன் பிறகும் சுற்றித்திரிந்தால், 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் கட்டும் வரை, பிடிக்கப்படும் மாடுகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். அதை பராமரிப்பதற்கு உண்டான செலவு, மாட்டின் உரிமையாளரிடம் வசூல் செய்யப்படும். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம், பொது சுகாதார குழுவிற்கு நிதி ஒதுக்கித் தர வேண்டும். எந்த திட்டத்திற்கும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை. கொசு மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ''தனியார் மூலம் சேகரிக்கப்படும் குப்பைக்கு, டன் அடிப்படையில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

''அது அமலுக்கு வரும் வரை, பழைய ஒப்பந்ததாரர் மூலம் குப்பை சேகரிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில், டன் அடிப்படையில் குப்பை சேகரிக்க டெண்டர் விடப்படும்,'' என்றார்.

தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உட்பட மக்கள் கூடும் இடங்களில், மக்கும், மக்காத குப்பையை போட, 50 மீட்டர் இடைவெளியில் தொட்டி வைக்க வேண்டும் என்பன உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொது சுகாதார குழு உறுப்பினர்கள் ஷில்பா, லட்சுமி பங்கேற்றனர். மாநகர நல அலுவலர் அஜிதா நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X