மின் இணைப்புடன் 'ஆதார்' இணைக்க அவகாசம் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஈரோடு:'மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தமிழக முதல்வர், மின் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு:மின் வாரியம், ஒவ்வொரு மின் இணைப்புதாரருக்கும் குறுந்தகவலில், மின் இணைப்பு எண்ணுடன் 'ஆதார்' எண்ணை

ஈரோடு:'மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தமிழக முதல்வர், மின் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு:

மின் வாரியம், ஒவ்வொரு மின் இணைப்புதாரருக்கும் குறுந்தகவலில், மின் இணைப்பு எண்ணுடன் 'ஆதார்' எண்ணை இணைக்க வலியுறுத்துகிறது.

வீடு, விசைத்தறி போன்றவைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்துள்ளவர்களுக்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால், இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அச்சம் உள்ளது.

ஆதார் எண்ணை இணைத்த பின் தான், மின் கட்டணம் செலுத்த முடியும் என்றவாறு இணையதளத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

மின் கட்டண உயர்வு ஏற்படும் போது, விவசாயத்துக்கான இலவச மின் இணைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; ஆனால், பிற மின் இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அத்துடன், விவசாய மின் இணைப்பில், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது போல, விசைத்தறி கூடங்கள், தறிகளைக் கூட வாடகைக்கும், குத்தகைக்கு எடுத்தும் பலர் செயல்படுத்துகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகமாக உள்ளது.

விசைத்தறிக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பை ஒருவர் வைத்திருந்தாலும், அதை வெவ்வேறான நபர் விசைத்தறி கூடம் அமைத்து பயன்படுத்துவதை அரசு உணர வேண்டும்.

அரசின் சத்துணவு திட்டம், இலவச சீருடை, புத்தகம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும், இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கும் விசைத்தறி பயன்படுத்தப்படுகிறது.

எனவே, ஆதார் இணைப்பால், விசைத்தறியாளர்களுக்கான பலன் நின்று விடாமல் பாதுகாக்க வேண்டும்.

அதுபோல, வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் எண் இணைப்புக்கு ஒரு ஆண்டுக்கு மேலாக அவகாசம் வழங்கப்பட்டது. இன்னும் கூட பலர் இணைக்காமல் உள்ளனர்.

எனவே, அதுபோல, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க உடனடி நடவடிக்கையை கைவிட்டு, சில மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X