காவல் நிலையத்தில் மாணவர்கள் 'வீடியோ'

Added : நவ 23, 2022 | |
Advertisement
விழுப்புரம்:விழுப்புரத்தில் காவல் நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவர் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் பழைய கோர்ட் கட்டடம் எதிரே நகர காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில், 16, 17 வயதுடைய அரசு பள்ளி மாணவர்கள் இருவர், சமூக வலைதளத்தில் பரவ விடுவதற்காக, ரீல்ஸ் என்ற பெயரில் வீடியோ எடுத்து உள்ளனர். அந்த வீடியோ தற்போது

விழுப்புரம்:விழுப்புரத்தில் காவல் நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவர் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் பழைய கோர்ட் கட்டடம் எதிரே நகர காவல் நிலையம் உள்ளது.

இந்த காவல் நிலையத்தில், 16, 17 வயதுடைய அரசு பள்ளி மாணவர்கள் இருவர், சமூக வலைதளத்தில் பரவ விடுவதற்காக, ரீல்ஸ் என்ற பெயரில் வீடியோ எடுத்து உள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அதாவது, காவல் நிலையத்தில் இருந்து மாணவர்கள் வெளியில் வருகின்றனர். அந்த வீடியோவிற்கு பின்னணி இசையாக போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி மற்றும் சைரன் சத்தத்துடன் மாணவர்கள் 'கெத்தாக' நடந்து வருவது போன்று வீடியோ பதிவு செய்துஉள்ளனர்.

ரீல்ஸ் வீடியோவை இதுவரை பஸ் மற்றும் தனியார் இடங்களில் பதிவு செய்த மாணவர்கள், தற்போது போலீஸ் நிலையத்தில் செய்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X