தம்பதியை கட்டிபோட்டு நகை, பணம் கொள்ளை

Added : நவ 23, 2022 | |
Advertisement
செங்கம்:செங்கம் அருகே வீடு புகுந்து, தம்பதியை கட்டி போட்டு நகை மற்றும் 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற, ஐந்து பேர் கும்பலை போலீசார் தேடுகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி கண்ணம்மாள், 90; இவர் மகன் ராஜவேலு, 65, விவசாயி; இவர் மனைவி தேன்மொழி, 60.மூவரும், அப்பகுதியிலுள்ள அவர்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி

செங்கம்:செங்கம் அருகே வீடு புகுந்து, தம்பதியை கட்டி போட்டு நகை மற்றும் 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற, ஐந்து பேர் கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி கண்ணம்மாள், 90; இவர் மகன் ராஜவேலு, 65, விவசாயி; இவர் மனைவி தேன்மொழி, 60.

மூவரும், அப்பகுதியிலுள்ள அவர்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசிக்கின்றனர். இருதினங்களுக்கு முன்இரவு வீட்டில் மூவரும் துாங்கி கொண்டிருந்தபோது, வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து, ராஜவேலு கதவை திறந்தார்.

அப்போது, ஐந்து பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டினுள் நுழைந்து, மூவரையும் கட்டி போட்டு, பீரோவில் இருந்த 7 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியது. அவ்வழியாக நேற்று முன்தினம் காலை சென்றவர்கள் அவர்களை மீட்டு, செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்து, தப்பியோடிய கொள்ளையர்கள் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X