குட்டி யானை உடல் தோண்டி எடுத்து ஆய்வு

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஓசூர்:ராயக்கோட்டை அருகே, மின்வேலியில் சிக்கி இறந்து, வனத்துறைக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட குட்டி யானையின் உடல், தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், மூன்று யானைகள் ஒரு குட்டியுடன் முகாமிட்டிருந்தன. கடந்த, 14ல் அதிகாலை, கடூர் அருகே அக்குபாய் கொட்டாய் பகுதியில் எல்லப்பா, 63, என்பவரது நெல்

ஓசூர்:ராயக்கோட்டை அருகே, மின்வேலியில் சிக்கி இறந்து, வனத்துறைக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட குட்டி யானையின் உடல், தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், மூன்று யானைகள் ஒரு குட்டியுடன் முகாமிட்டிருந்தன.

கடந்த, 14ல் அதிகாலை, கடூர் அருகே அக்குபாய் கொட்டாய் பகுதியில் எல்லப்பா, 63, என்பவரது நெல் வயலுக்கு சென்றன.

அப்போது, வயலை சுற்றி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி, 4 முதல், 5 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை பலியானது.

இதை வனத்துறைக்கு தெரிவிக்காத எல்லப்பா, தன் மகன்களான முனிராஜ், 38, சுப்பிரமணி, 28, ஆகியோருடன் சேர்ந்து, விவசாய நிலத்தில் குழிதோண்டி குட்டி யானையை புதைத்தார்.

இதையறிந்த வனத்துறையினர், எல்லப்பாவை கைது செய்தனர். மேலும், குட்டி யானையின் உடலை நேற்று முன்தினம் வனத்துறையினர் தோண்டினர்.

கோவையில் இருந்து வந்த, சிறப்பு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முன்னிலையில், உடல் கூறாய்வு செய்யப்பட்டது.

அதில், யானை மின்சாரம் தாக்கி இறந்தது உறுதியான நிலையில், எல்லப்பாவின் மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகியோரை, வனத்துறையினர் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

வனப்பகுதியை ஒட்டி குழி தோண்டி, குட்டி யானை புதைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X