பல்லுயிர் பாரம்பரிய தலமானது அரிட்டாபட்டி!

Added : நவ 23, 2022 | |
Advertisement
மேலுார்:மேலுார் அருகே அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மதுரை மாவட்டம், மேலுார் அருகே அரிட்டாபட்டியில் ஏழுமலைகள் கொண்ட மலைத்தொடர் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், 'ஏழுமலை பறவைகள் பல்லுயிர் பாதுகாப்பு' என்ற அமைப்பை உருவாக்கினார்.இவர், 2004 முதல் இம்மலைகளில் பறவைகள், பல்லுயிர் கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு
 பல்லுயிர் பாரம்பரிய தலமானது அரிட்டாபட்டி!

மேலுார்:மேலுார் அருகே அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலுார் அருகே அரிட்டாபட்டியில் ஏழுமலைகள் கொண்ட மலைத்தொடர் உள்ளது.

இக்கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், 'ஏழுமலை பறவைகள் பல்லுயிர் பாதுகாப்பு' என்ற அமைப்பை உருவாக்கினார்.

இவர், 2004 முதல் இம்மலைகளில் பறவைகள், பல்லுயிர் கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அனுப்பியதன் விளைவால், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அரசு அறிவித்துஉள்ளது.

இந்த அறிவிப்பை, கிராம மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

இது குறித்து ரவிச்சந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் முதன் முறையாக பல்லுயிர்கள் வாழும் கிராமமாக அரிட்டாபட்டியை அரசு அறிவித்துள்ளது.

இம்மலை தொடர்களில் உள்ள 250 பறவை இனங்களில், அரிதான ராப்டர் இனங்களை சேர்ந்த லகர்பால்கன், ஷாஹின் பால்கன், போனெல்லிஸ் ஈகிள், உலகத்திலே அதி வேகமாக பறக்கும் திறன் கொண்ட லகடு வல்லுாரு உள்ளிட்ட பறவை இனங்களும், 265 வகையான பூச்சி இனங்களும் உள்ளன.

அரிட்டாபட்டியில் ஏழு மலைகள், 12 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், இரண்டு தடுப்பணைகள் உள்ளன.

இதில் ஆனைகொண்டான்குளம் 16ம் நுாற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது.

இங்கு, 2,200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், ஜெயின் படுகைகள், குடைவரை கோவில்கள் உள்ளன. இவை அனைத்தையும் அரசு அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர்.

இப்பகுதிக்கு வனம், தொல்லியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X