குழந்தையுடன் அகதி பெண் வெளியேற்றம் மண்டபம் முகாமில் மறியல்

Added : நவ 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தையுடன் அகதி பெண் வெளியேற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த சக அகதிகள் மறியலில் ஈடுபட்டனர்.இலங்கை சேர்ந்த ரோஸ்மேரி தனது மகள் துர்கா, உறவினர்களுடன் அகதியாக ராமேஸ்வரம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளார். இவர் மகள் கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கணவருடன் தங்கினார். துர்கா, 3வது பிரசவத்திற்கு இரு
 குழந்தையுடன் அகதி பெண் வெளியேற்றம் மண்டபம் முகாமில் மறியல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தையுடன் அகதி பெண் வெளியேற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த சக அகதிகள் மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கை சேர்ந்த ரோஸ்மேரி தனது மகள் துர்கா, உறவினர்களுடன் அகதியாக ராமேஸ்வரம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளார். இவர் மகள் கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கணவருடன் தங்கினார்.

துர்கா, 3வது பிரசவத்திற்கு இரு மாதம் முன் தாய் தங்கியுள்ள மண்டபம் முகாமிற்கு கணவர், இரு குழந்தையுடன் வந்தார். 5 நாட்களுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துர்காவை 3 குழந்தையுடன் கும்மிடிபூண்டி முகாமிற்கு செல்லும்படி தனித்துணை ஆட்சியர் சிவகுமாரி வெளியேற்றி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிற அகதிகள், தனித்துணை ஆட்சியரை கண்டித்து நேற்று முன்தினம் இரவு முகாம் நுழைவு வாசல் முன் மறியலில் ஈடுபட்டனர்.

பின் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபு, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., தனஞ்செயன், அகதிகளிடம் சமரசம் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X