விமான நிலைய பாதுகாப்பில் கவனம் ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை:விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோவை விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கோவை விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம், அதன் தலைவரான கோவை கம்யூ., - எம்.பி., நடராஜன் தலைமையில் காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்தது.அப்போது, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன்
 விமான நிலைய பாதுகாப்பில் கவனம் ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

கோவை:விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோவை விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம், அதன் தலைவரான கோவை கம்யூ., - எம்.பி., நடராஜன் தலைமையில் காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் பேசியதாவது:

கோவை விமான நிலையத்தை, 2019 - 20ல் 2.84 லட்சம் பயணியரும், நடப்பு நிதியாண்டில் இதுவரை, 14.5 லட்சம் பேரும் பயன்படுத்தியுள்ளனர்.

இது, 2023 - 24ல், 30 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சரக்குகளை பொறுத்தவரை, 2019 - 20ல், 13 ஆயிரத்து, 430 டன், நடப்பு நிதியாண்டில் இதுவரை, 6,022 டன் கையாண்டுள்ளோம்.

'பேஸ்-1' திட்ட விரிவாக்கத்தில் (2036 - 37), விமான முனைய கட்டடம், 1.25 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்படும்.

ஆண்டுக்கு பயணிகளின் வருகை, 1.2 கோடியாகவும், பரபரப்பான வேளைகளில் ஒரு மணி நேரத்தில், 5,000 பயணியரை கையாளும் திறனையும் கொண்டதாக இருக்கும்.

தற்போதைய, 2,990 மீட்டர் 'ரன்வே'யை, 3,810 மீட்டராக அதிகரித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மாநில அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

விமான நிலைய விரிவாக்கம் பெரும் கட்டமைப்பு பணி என்பதால், வரும் பிப்., மாதத்துக்குள் நிலம் ஒப்படைக்கப்பட்டாலும், நிறைவடைய நான்கு ஆண்டுகளாவது ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் பேசுகையில், ''விமான நிலையத்துக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் நிலையில், விமான நிலைய பாதுகாப்புப் படையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

மாநகராட்சி கமிஷனர் பிரதாப், டி.ஆர்.ஓ., சுபாநந்தினி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X