ராமநாதபுரத்தில் தடையை மீறி விற்கப்படும் பச்சை கிளிகள்

Added : நவ 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமநாதபுரம்:அரிய வகை பறவைகள் பட்டியலில் தற்போது பச்சை கிளிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றை விற்க தடையுள்ளது. இதனை மீறி ராமநாதபுரம் பகுதியில் சிலர் இவற்றை ஒன்று 200, 300 ரூபாய்க்கு விற்கின்றனர். அரிய வகைராமநாதபுரம் மாவட்ட கிராமப்புறங்களில் பனை மரங்கள், தென்னை மரங்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் ஏராள மான பச்சை கிளிகள் காணப்படுகின்றன.இவ்வகை கிளிகளுக்கு நாம் சொன்னதை
 ராமநாதபுரத்தில் தடையை மீறி விற்கப்படும் பச்சை கிளிகள்

ராமநாதபுரம்:அரிய வகை பறவைகள் பட்டியலில் தற்போது பச்சை கிளிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றை விற்க தடையுள்ளது. இதனை மீறி ராமநாதபுரம் பகுதியில் சிலர் இவற்றை ஒன்று 200, 300 ரூபாய்க்கு விற்கின்றனர்.


அரிய வகை



ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புறங்களில் பனை மரங்கள், தென்னை மரங்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் ஏராள மான பச்சை கிளிகள் காணப்படுகின்றன.

இவ்வகை கிளிகளுக்கு நாம் சொன்னதை கூறும் திறன் இருப்பதால் வீடுகள், நிறுவனங்களில் பச்சை கிளியை வளர்க்கின்றனர். சிலர் வியாபார நோக்கத்தில் பிடித்து விற்கின்றனர்.

தற்போது இவற்றை பார்ப்பது அரிதாகி விட்டது. இதையடுத்து வனத்துறையினர் இவற்றை அரிய வகை பறவைகள் பட்டியலில் இணைத்து விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளை அணுகி ரகசியமாக பச்சை கிளிகளை விற்கின்றனர்.

ஒரு கிளி 200, ஜோடியாக வாங்கினால் 300 ரூபாய்க்கு தருகின்றனர். இவர்களை கண்டறிந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பறவைகள் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.


உரிமம்



வனத்துறையினர் கூறுகையில், 'இந்திய வனச்சட்டப்படி மைனா, பச்சை கிளிகள் விற்பது, வீடு, கடைகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பறவைகள் விற்பனை செய்ய முறைப்படி வனத்துறை அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும்.

'சோதனையின் போது பிடிப்பட்டால் 1,000 - 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பச்சை கிளிகளை பொது மக்கள் வாங்க வேண்டாம்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
24-நவ-202208:09:09 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பச்சைக்கிளிய வெளியேத்திட்டாரே ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X