வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய சொத்துக்கள் மீதான தடை நீக்கம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
விருத்தாசலம்:'விருத்தாசலம் பகுதியில் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய சொத்துக்கள் மீதான தடை நீக்கப்படுகிறது' என, சப் - கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.விருத்தாசலம் நகராட்சி இந்திரா நகர், சிந்தாமணி நகர், முல்லை நகர், நபிகள் நாயகம் தெரு, ஆலடி ரோடு, வயலுார், பூந்தோட்டம், கார்குடல் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் உள்ள குறிப்பிட்ட நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என
 வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய சொத்துக்கள் மீதான தடை நீக்கம்

விருத்தாசலம்:'விருத்தாசலம் பகுதியில் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய சொத்துக்கள் மீதான தடை நீக்கப்படுகிறது' என, சப் - கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

விருத்தாசலம் நகராட்சி இந்திரா நகர், சிந்தாமணி நகர், முல்லை நகர், நபிகள் நாயகம் தெரு, ஆலடி ரோடு, வயலுார், பூந்தோட்டம், கார்குடல் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் உள்ள குறிப்பிட்ட நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, அந்த நிலங்கள் அனைத்தும் பூஜ்யம் மதிப்பு என, விருத்தாசலம் சார் - பதிவாளர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டது.

மேலும், அந்த சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது என்பதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, விருத்தாசலம் சப் - கலெக்டர் அலுவலகத்தில்,சப் கலெக்டர் பழனி தலைமையில் அமைதிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்தில், மாநில பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளபடி, வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்து என்று கருதும்பட்சத்தில்,அவர்கள் அதற்கான ஆவணங்களை முறைப்படி ஒப்படைக்கும் வரை, பழைய நிலையே தொடரும்.

அதனடிப்படையில் தொடர்ந்து பத்திரப்பதிவு நடைபெறும். இதன் மூலம் சொத்துக்களை வாங்க, விற்க இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதுஎனவும் சப் - கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில்,பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X