ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய அஞ்சலக கட்டடம் திறப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சியில், 1985ம் ஆண்டு முதல், துணை அஞ்சலகம் குத்தகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.இந்த அஞ்சலகத்தில், சுற்று வட்டார 10 கிராம மக்களின் 2,500 சேமிப்பு கணக்குகள் உள்ளன. இதில், மூன்று ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.சொந்த கட்டடம் கட்டுவதற்காக, ஊராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. இதையடுத்து, அஞ்சல் துறை சார்பில், போதிய வசதிகளுடன், 25 லட்சம்
 ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய அஞ்சலக கட்டடம் திறப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சியில், 1985ம் ஆண்டு முதல், துணை அஞ்சலகம் குத்தகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

இந்த அஞ்சலகத்தில், சுற்று வட்டார 10 கிராம மக்களின் 2,500 சேமிப்பு கணக்குகள் உள்ளன. இதில், மூன்று ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

சொந்த கட்டடம் கட்டுவதற்காக, ஊராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. இதையடுத்து, அஞ்சல் துறை சார்பில், போதிய வசதிகளுடன், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அஞ்சல் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதன் துவக்க விழா, நடந்தது. இதில், செம்பாக்கம் ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை வகித்து, புதிய கட்டட செயல்பாட்டை துவக்கி வைத்தார்.

விழாவில், துணை அஞ்சலக அதிகாரி ராஜ் உட்பட, பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X