இ.சி.ஆர்., பேருந்துகளில் தொங்கியபடி அபாய பயணம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
புதுப்பட்டினம்:அணுசக்தி துறை கல்பாக்கம் நகரியம், புதுப்பட்டினம் ஊராட்சி ஆகிய பகுதிகள், ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இப் பகுதி அருகில், சதுரங்கப்பட்டினம், வாயலுார், விட்டிலாபுரம், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளும் உள்ளன.கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகள் வழியே, சென்னை பகுதிக்கு செல்ல, கல்பாக்கத்திலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.ஆனால்,
 இ.சி.ஆர்., பேருந்துகளில் தொங்கியபடி அபாய பயணம்

புதுப்பட்டினம்:அணுசக்தி துறை கல்பாக்கம் நகரியம், புதுப்பட்டினம் ஊராட்சி ஆகிய பகுதிகள், ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இப் பகுதி அருகில், சதுரங்கப்பட்டினம், வாயலுார், விட்டிலாபுரம், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளும் உள்ளன.

கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகள் வழியே, சென்னை பகுதிக்கு செல்ல, கல்பாக்கத்திலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆனால், தற்போது கல்பாக்கத்தில் இருந்து சென்னை பகுதிகளுக்கு, போக்குவரத்துக் கழக நிர்வாகம், கடந்த எட்டு ஆண்டுகளாக பேருந்துகள் இயக்கவில்லை.

கல்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு செல்லும் பேருந்து மூலம் சென்று, அங்கிருந்து தான் திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல முடியும். கல்பாக்கத்திலிருந்து சென்னை செல்வோர், நேரடி பேருந்து இல்லாததால், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை - புதுச்சேரி பேருந்தை மட்டுமே, அவர்கள் நம்பியுள்ளனர். இப்பேருந்தும், புறப்பட்ட இடத்திலிருந்தே, நெரிசலுடன் வருவதால், அதில் ஏற இயலவில்லை.

வேலைக்கு செல்லும் ஆண்கள், விபத்து அபாயத்துடன் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்லவே இயலவில்லை.

போக்குவரத்துக் கழக நிர்வாகம், கல்பாக்கத்திலிருந்து சென்னைக்கு, மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X