பீச் - தாம்பரம் தடம் 4 மின்சார ரயில்கள் ரத்து

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், நாளையும் நாளை மறுநாளும், தலா நான்கு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தாம்பரம் ரயில்வே யார்டில் உள்ள ரயில் பாதைகளில், நாளையும் நாளை மறுநாளும் நள்ளிரவு 12:40 மணி முதல் அதிகாலை 2:10 மணி வரையில் பராமரிப்பு

சென்னை:ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், நாளையும் நாளை மறுநாளும், தலா நான்கு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் ரயில்வே யார்டில் உள்ள ரயில் பாதைகளில், நாளையும் நாளை மறுநாளும் நள்ளிரவு 12:40 மணி முதல் அதிகாலை 2:10 மணி வரையில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

* சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11:40 மணி, இரவு 11:59 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன

* தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 11:20 மணி, இரவு 11:40 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X