அம்மா உணவகத்தில் வசதியில்லை; தரையில் நீர் தேங்குவதால் வழுக்குது

Added : நவ 23, 2022 | |
Advertisement
வால்பாறை : வால்பாறை அம்மா உணவகத்தில், போதிய அடிப்படை வசதி இல்லாததால், உணவு அருந்த செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில், அம்மா உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தால், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர். இதுதவிர, அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களும், எஸ்டேட் தொழிலாளர்கள் அதிக அளவில் உணவு சாப்பிட வருகின்றனர்.இந்நிலையில், உணவகத்தில்



வால்பாறை : வால்பாறை அம்மா உணவகத்தில், போதிய அடிப்படை வசதி இல்லாததால், உணவு அருந்த செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில், அம்மா உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தால், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர்.

இதுதவிர, அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களும், எஸ்டேட் தொழிலாளர்கள் அதிக அளவில் உணவு சாப்பிட வருகின்றனர்.

இந்நிலையில், உணவகத்தில் மின்விளக்கு எரிவதில்லை. இருளில் நின்று சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. அதே போல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தொட்டியில், தண்ணீர் வருவதில்லை.

உணவகத்தின் மேற்கூரை ஒழுகி, தரையில் தண்ணீர் தேங்குவதால், 'டைல்ஸ்' வழுக்கி விடுகிறது. உணவகத்தின் பின்பக்கம் உள்ள குழாய் உடைந்த நிலையில், மார்க்கெட் வழித்தடத்தில் கழிவு நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அம்மா உணவகத்தில், சமையல் செய்ய போதிய அளவு பாத்திரம் இல்லை. மின்விளக்கு, மின்விசிறி இயங்குவதில்லை.

மேற்கூரை ஒழுகுவதால் மழை காலங்களில் உணவு அருந்த வரும் மக்கள், வழுக்கி விழுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X