நடைபாதையில் வீணாகும் மைல்கல்லால் மக்கள் அவதி

Added : நவ 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, நடைபாதையை மைல்கல் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் காயமடைகின்றனர்.பொள்ளாச்சி, காந்திசிலை அருகே, நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் உடுமலை ரோடு வளைவில் ஆபத்து அதிகமுள்ளது. அங்கு, ரோட்டிலுள்ள பிரதான குடிநீர் குழாய் திறப்பதற்கான வால்வில், குடிநீர் கசிந்து ரோட்டில் தேங்கி நிற்கிறது. மேலும், வாகன ஓட்டுனர்கள்
 நடைபாதையில் வீணாகும் மைல்கல்லால் மக்கள் அவதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, நடைபாதையை மைல்கல் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் காயமடைகின்றனர்.

பொள்ளாச்சி, காந்திசிலை அருகே, நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் உடுமலை ரோடு வளைவில் ஆபத்து அதிகமுள்ளது. அங்கு, ரோட்டிலுள்ள பிரதான குடிநீர் குழாய் திறப்பதற்கான வால்வில், குடிநீர் கசிந்து ரோட்டில் தேங்கி நிற்கிறது. மேலும், வாகன ஓட்டுனர்கள் பார்வைக்காக வைக்கப்படும், 'மைல்கல்' பயன்பாட்டின்றி, அதே பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது.

மைல்கல்லில் கூர்மையான பகுதி பாதசாரிகளை பதம் பார்த்து விடுகிறது. நடைபாதையை பயன்படுத்துவோர், காயமடைகின்றனர். இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. ரோட்டில் நடந்து செல்லும் போது, அங்கு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், வாகனங்கள் வேகமாக வருவதாலும் விபத்து அபாயம் நிலவுகிறது.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கு குடிநீர் கசிவு ஏற்படுவதை சீரமைக்க வேண்டும். நடைபாதையில் உள்ள மைல்கல்லை வேறுபகுதியில் நடுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X