காற்றில் பறக்குது அரசின் உத்தரவு; கவலையில் தேயிலை தொழிலாளர்கள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சக்கூலி வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு நடைமுறைக்கு வராததால், தேயிலை தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு



வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சக்கூலி வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு நடைமுறைக்கு வராததால், தேயிலை தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

வால்பாறை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோவையில் நடந்த இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இந்நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 425.40 ரூபாய் வழங்க வேண்டும், என, தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாணை வெளியிட்டது.

அரசின் உத்தரவால், தேயிலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அரசு அறிவித்த கூலி உயர்வு இன்று வரை அமலுக்கு வராததால், தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் கூறியதாவது:

உயிரை பணயம் வைத்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும், தொழிலாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து, குறைந்தபட்ச கூலியாக, 425.40 ரூபாய் வழங்க தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் கூலி உயர்வு கிடைக்காததால், தனியார் மற்றும் 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளோம். தொழிலாளர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலியை உடனடியாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X